இலங்கைக்கு நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

இலங்கைக்கு நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: வங்​கக் கடலில் உரு​வான டிட்வா புய​லால் இலங்​கை​யில் கனமழை கொட்​டித் தீர்த்​தது. வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி 47 பேர் இறந்​த​தாக​வும் 23 பேரை காண​வில்லை எனவும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி நேற்று எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், ‘‘டிட்வா புய​லால் தங்​களின் அன்​புக்​குரிய​வர்​களை இழந்த இலங்கை மக்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரிவிக்​கிறேன். அனைத்து குடும்​பங்​களும் பாதிப்​பில் இருந்து விரைந்து மீண்டு வரவும் அவர்​களின் பாது​காப்​புக்​காக​வும் பிரார்த்​தனை செய்​கிறேன்.

நமது நெருங்​கிய அண்டை நாடான இலங்​கைக்கு சாகர் பந்து திட்​டத்​தின் கீழ் நிவாரணப் பொருட்​கள் மற்​றும் மனி​தாபி​மான உதவி​களை இந்​தியா விரைந்து அனுப்​பி​யுள்​ளது. கூடு​தல் உதவி​களை செய்​ய​வும் தயா​ராக உள்​ளது’’ என்று கூறி​யுள்​ளார்.

இந்​நிலை​யில் இலங்​கை​யில் வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் மீட்​புப் பணி​களில் ஐஎன்​எஸ் விக்​ராந்த் உதவி வரு​வ​தாக அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

இலங்கைக்கு நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
ஜிடிபி 8.2% வளர்ச்சி: ஒன்றரை ஆண்டில் அதிகபட்சம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in