ஜிடிபி 8.2% வளர்ச்சி: ஒன்றரை ஆண்டில் அதிகபட்சம்

ஜிடிபி 8.2% வளர்ச்சி: ஒன்றரை ஆண்டில் அதிகபட்சம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்​டின் ஜிடிபி ஜூலை முதல் செப்​டம்​பர் வரையி​லான நடப்பு நிதி​யாண்​டின் 2-வது காலாண்​டில் 8.2 சதவீத​மாக வளர்ச்​சி​யடைந்​துள்​ளது. இது, கடந்த ஒன்றரை ஆண்​டு​களில் இல்​லாத அதி​கபட்ச அளவாகும்.

ஜிஎஸ்​டி குறைப்​பால் நுகர்வு அதி​கரிக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் நிறு​வனங்​கள் அதிக பொருட்​களை உற்​பத்தி செய்ய தொடங்​கி​யுள்​ளன.

நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் (ஏப்​ரல்​-ஜூன்) நாட்​டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீத​மாக​வும், 2-வது காலாண்​டில் 5.6 சதவீத​மாக​வும் இருந்​தன. அவற்​றுடன் ஒப்​பிடும்​போது 2-வது காலாண்​டில் பொருளா​தார வளர்ச்சி மேம்​பட்​டுள்​ளது. அதி​லும், கடந்த ஒன்றரை ஆண்​டு​களில் இல்​லாத வளர்ச்​சியை பதிவு செய்​துள்​ளது.

மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 14 சதவீத பங்​களிப்பை கொண்​டுள்ள தயாரிப்பு துறை​யின் வளர்ச்சி நடப்பு நிதி​யாண்​டின் 2-வது காலாண்​டில் 2.2 சதவீதத்​திலிருந்து 9.1 சதவீத​மாக அதி​கரித்​துள்​ளது. இந்​தி​யா​வின் நாமினல் ஜிடிபி செப்​டம்​பர் காலாண்​டில் 8.7 சதவீத வளர்ச்​சியை பதிவு செய்​துள்​ளது. இவ்​வாறு புள்​ளி​விவரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஜிடிபி 8.2% வளர்ச்சி: ஒன்றரை ஆண்டில் அதிகபட்சம்
3-ம் உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்வோருக்கு நிரந்தரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in