அசாம் மாநிலத்தில் 2-வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த சர்மா

பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் உள்ளிட்டோர் வாழ்த்து
அசாம் மாநிலத்தில் 2-வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த சர்மா
Updated on
1 min read

குவாஹாட்டி: அ​சாம் மாநில முதல்​வ​ராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்​டாவது முறை​யாகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். அவருடன் நான்கு எம்​.எல்​.ஏ.க்​களும் அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

வடகிழக்கு மாநில​மான அசாமில் பா.ஜ.க தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி தொடர்ந்து மூன்​றாவது முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​துள்ள நிலை​யில், ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று முதல்​வ​ராகப் பதவி​யேற்​றார்.

பா.ஜ.க-​வின் ராமேஸ்​வர் தெலி, அஜந்தா நியோக், அசோம் கண பரிஷத் கட்​சி​யின் அதுல் போரா மற்​றும் பி.பி.எஃப் கட்​சி​யின் சரண் போரா ஆகிய நான்கு பேரும் அமைச்​சர்​களாகப் பதவியேற்றுக் கொண்​டனர்.

கவு​காத்​தி​யின் கானா​பாரா பகுதியில் உள்ள கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்ற பிரம்​மாண்ட விழா​வில், ஆளுநர் லட்​சுமண் பிர​சாத் ஆச்​சார்​யா, ஹிமந்த பிஸ்வா சர்​மாவுக்​கும் மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்​பிர​மாண​மும், ரகசி​யக் காப்​புப் பிரமாண​மும் செய்து வைத்​தார்.

இந்த விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங், நிதின் கட்​கரி, சர்​வானந்த சோனோவால், பவித்ரா மார்​கெரிட்​டா, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்​வர்​கள், துணை முதல்​வர்​கள் மற்​றும் பா.ஜ.க தலை​வர் நிதின் நவீன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

பாரம்​பரிய ‘கமோ​சா' (துண்​டு) அணிந்​து, வேட்​டி-குர்தா உடை​யில் வந்த ஹிமந்த பிஸ்வா சர்​மா, அசாமிய மொழி​யில் பதவியேற்றார். அமைச்​சர்​களில் தெலி, போரா மற்​றும் நியோக் ஆகியோர் அசாமிய மொழி​யிலும், பி.பி.எஃப் அமைச்​சர் சரண் போரா போடோ மொழி​யிலும் பதவி​யேற்​றுக் கொண்​டனர். பதவியேற்பு விழா முடிந்​ததும், முதல்​வர் மற்​றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்​துகளை தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக முதல்​வர் சர்மா தனது எக்ஸ் பக்க பதிவில்,”அன்னை காமாக்​யா, மகாபுருஷ ஸ்ரீமந்த சங்​கர்​தேவ் மற்றும் அசாம் மக்​களின் ஆசி​யுடன் முதல்​வ​ராகப் பதவியேற்றேன். அமைச்​சரவை சகாக்​களு​டன் இணைந்து மக்களின் விருப்​பங்​களை நிறைவேற்​ற​வும், அவர்​களுக்​குச் சேவை செய்​ய​வும் காத்​திருக்​கிறேன். அசாம் மாநிலம் வளர்ச்சியின் புதிய உச்​சங்​களைத் தொடும்” என்று தெரிவித்துள்ளார்.

முந்​தைய அமைச்​சர​வை​யில் நிதி அமைச்​ச​ராக இருந்த அஜந்தா நியோக், வேளாண் அமைச்​ச​ராக இருந்த அதுல் போரா மற்​றும் போக்​கு​வரத்து அமைச்​ச​ராக இருந்த சரண் போரா ஆகியோர் மீண்​டும் அமைச்​சர்​களாகி​யுள்​ளனர். முன்​னாள் மத்​திய அமைச்சரான ராமேஸ்​வர்​ தெலி, மீண்​டும்​ மாநில அரசி​யலுக்​குத்​ திரும்​பியுள்​ளார்​.

அசாம் மாநிலத்தில் 2-வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த சர்மா
நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in