பழங்குடியினரை புறந்தள்ளிய கடந்த கால அரசுகள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பழங்குடியினரை புறந்தள்ளிய கடந்த கால அரசுகள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: கடந்த கால அரசுகள் பழங்குடியின மக்களை புறந்தள்​ளிய​தாகவும் அவர்​கள் நலனில் துளி​யும் அக்​கறை செலுத்த​வில்லை என்​றும் பிரதமர் நரேந்திர மோடி குற்​றம்​சாட்டி உள்​ளார்.

சுதந்​திர போராட்ட தலை​வர் பிர்சா முண்​டாவின் பிறந்த நாள், பழங்​குடி​யினர் தினமாகக் கொண்​டாடப்​படு​கிறது. இதை​யொட்டி மகாராஷ்டிராவின் கட்​சிரோவில் நேற்று நடை​பெற்ற விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்​றார். அப்போது அவர் பேசிய​தாவது: பழங்​குடி​யினர் தினத்தை ஒட்டி நாடு முழு​வதும் 170 திட்​டங்​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன. 70 திட்டங்களுக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்டு உள்​ளது. இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.3,000 கோடி ஆகும். இவற்​றின் மூலம் பழங்​குடி​யின மக்​கள் பெரிதும் பலன் அடைவார்​கள்.

சமீபத்​தில் இரு பெரிய சாதனைகளை படைத்து உள்​ளோம். முதலா​வது சாதனை சுமார் 50 கோடி மக்​கள் வறுமையில் இருந்து மீண்டு உள்​ளனர். 2-வது சாதனை, நக்​சல், மாவோயிஸ்ட் தீவிர​வாதம் ஒழிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த இரு சாதனைகளும் பழங்​குடி மக்​களோடு மிகவும் நெருங்​கிய தொடர்பு உடையவை ஆகும்.

கடந்த 2023-ம் ஆண்​டில் ஜன்​ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் தொடங்​கப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் பழங்​குடி​யின மக்​களுக்கு கான்​கிரீட் வீடுகள் கட்​டிக் கொடுக்​கப்​படு​கிறது. மேலும் குடிநீர், சாலை மேம்​பாடு, மருத்​துவ வசதி, கல்வி, மின்சாரம், தொலைத்​தொடர்பு தொடர்​பான பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. முத்ரா யோஜனா திட்​டத்​தின் கீழ் கடன் உதவி வழங்​கப்​படு​கிறது. இதேபோல பழங்​குடி​யின மக்களின் நலனுக்​காக பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இத​னால் அவர்​களின் வாழ்​வாதா​ரம் மேம்பட்டிருக்கிறது.

கடந்த கால அரசுகள் பழங்​குடி​யின மக்​களை முழு​மையாக புறந்தள்​ளினர். அவர்​களின் நலனில் துளி​யும் அக்​கறை செலுத்தவில்லை. பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் பகுதி​களில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிர​வாதி​களின் ஆதிக்​கம் அதி​க​மாக இருந்​தது. இதன் காரண​மாக மிக நீண்ட காலமாக தீவிரவாதிகளின் பிடி​யில் சிக்​கித் தவித்​தனர். ஒவ்​வொரு வீடுகளில் இருந்​தும் சிறு​வர், சிறுமிகளை தீவிர​வாதி​கள் பிடித்​துச் சென்​றனர். இதை யாரும் தடுக்​க​வில்லை.

பாஜக அரசு பதவி​யேற்ற

பிறகு நக்​சல், மாவோயிஸ்ட் தீவிர​வாதத்தை ஒடுக்க பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. இதன் காரண​மாக நக்​சல், மாவோயிஸ்ட் பாதிப்பு இல்​லாத இந்​தியா உரு​வாகி உள்​ளது. தீவிரவாதம் ஒழிந்த பிறகு பழங்​குடி​யினர் பகுதி​களில் அடிப்​படை வசதிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அவர்​களுக்கு தரமான கல்வி கிடைக்​கிறது. வேலை​வாய்ப்​பு​கள் பெருகி வருகின்​றன. பழங்​குடி​யின மக்​கள் மத்​தி​யில் புதிய நம்​பிக்கை பிறந்​துள்​ளது. இவ்​வாறு அவர் பேசினார்.

பழங்குடியினரை புறந்தள்ளிய கடந்த கால அரசுகள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
“மாவோயிஸ வன்முறையால் பழங்குடியின மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்” - பிரதமர் மோடி

X