3 நாடுகளில் பிரதமர் மோடி 4 நாள் பயணம்: ஜோர்டானில் உற்சாக வரவேற்பு

3 நாடுகளில் பிரதமர் மோடி 4 நாள் பயணம்: ஜோர்டானில் உற்சாக வரவேற்பு
Updated on
1 min read

அம்மான்: பிரதமர் நரேந்திர மோடி ஜோர்​டான், எத்​தி​யோப்​பி​யா, ஓமன் ஆகிய 3 நாடு​களில் 4 நாள் பயணம் செய்​வதற்​காக நேற்று காலை டெல்​லியி​லிருந்து தனி விமானம் மூலம் புறப்​பட்​டுச் சென்றார். மாலையில் ஜோர்டான் தலைநகர் அம்​மான் சென்றடைந்த அவருக்கு அங்கு உற்​சாக வரவேற்வு அளிக்கப்பட்டது.

இரு நாடு​கள் இடையே உறவு​கள் ஏற்​பட்டு 75 ஆண்​டு​கள் நிறைவடைவதை முன்​னிட்டு இந்​தப் பயணத்தை பிரதமர் மோடி மேற்​கொண்​டுள்​ளார். ஜோர்​டான் மன்​னர் அப்​துல்லா பின் அல் ஹுசைனை பிரதமர் மோடி நேற்று மாலை நேரில் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது இரு​நாட்டு உறவு​களை மேம்​படுத்​து​வது தொடர்​பாக இரு​வரும் ஆலோ​சனை நடத்​தி​ய​தாகத் தெரிய​வந்துள்​ளது.

இந்​நிலை​யில் இன்று நடை​பெறும் வர்த்தக மாநாட்​டில் பிரதமர் மோடி, ஜோர்​டான் மன்​னர் அப்​துல்லா பின் அல் ஹுசைன் இரு​வரும் பங்​கேற்​கின்​றனர். இரு நாடு​களைச் சேர்ந்த தொழில​திபர்​களும் இந்த மாநாட்​டில் கலந்​து​கொள்​ள உள்​ளனர். இந்த மாநாட்டின் ​போது பல்​வேறு துறை​களில் இரு நாடு​களிடையே ஒப்பந்​தங்​கள் கையெழுத்​தாகும் எனத் தெரி​கிறது.

இந்​தப் பயணத்​தில் 2-வது நாடாக 16-ம் தேதி (இன்​று) எத்​தி​யோப்​பி​யா​வுக்கு பிரதமர் மோடி செல்​ல​வுள்​ளார். அங்கு அந்​நாட்டு பிரதமர் அபியு அகமது அலி உள்​ளிட்ட தலை​வர்​களை பிரதமர் மோடி சந்​தித்து இருதரப்பு உறவை மேம்​படுத்​து​வது குறித்து ஆலோ​சனை நடத்​துகிறார். பிரதமர் மோடி எத்​தி​யோப்​பியா செல்வது இதுவே முதல்​முறை​யாகும்.

இறு​தி​யாக வரும் 17-ம் தேதி ஓமன் செல்​லும் பிரதமர் மோடி, அந்நாட்டு சுல்​தான் ஹைதம் பின் தாரிக்கை சந்​தித்து இரு தரப்பு பொருளா​தா​ரம், வர்த்​தகம், பாது​காப்​பு, எரிசக்​தி, தொழில்​நுட்ப ஒத்​துழைப்பு ஆகிய துறை​கள் குறித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்தவுள்​ளார். இந்த சந்​திப்​பின்​போது பல்​வேறு முக்​கிய ஒப்பந்தங்​கள் கையெழுத்​தாக உள்​ளன.

3 நாடுகளில் பிரதமர் மோடி 4 நாள் பயணம்: ஜோர்டானில் உற்சாக வரவேற்பு
“நான் சொல்லித்தான் அன்புமணிக்கு அமைச்சர் பதவி” - ஜி.கே.மணி ஆதங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in