“நான் சொல்லித்தான் அன்புமணிக்கு அமைச்சர் பதவி” - ஜி.கே.மணி ஆதங்கம்

பாமக செயல்தலைவர் ஜி.கே.மணியின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது.. படம்: எல்.சீனிவாசன்

பாமக செயல்தலைவர் ஜி.கே.மணியின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது.. படம்: எல்.சீனிவாசன்

Updated on
2 min read

அன்​புமணியை மத்​திய அமைச்​ச​ராக்க நான் பரிந்​துரை செய்​ததையடுத்தே ராம​தாஸ் ஒப்​புக்​கொண்​டார் என்று பாமக கவுரவ தலை​வர் ஜி.கே.மணி தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: என்னை துரோகி என்று அன்​புமணி கூறியது வேதனை​யாக இருக்​கிறது. அன்​புமணிக்கு நான் எந்த வகை​யிலும் கெடு​தலோ, துரோகமோ செய்​தது இல்​லை. அன்​புமணி​யின் செயல்​பாடு​களால் தான் ராம​தாஸ் கண்​ணீர் வடிக்​கி​றார். எனது குடும்​பத்​தில் இருப்​பவர்​கள் யாரும் பதவிக்கு வரமாட்​டார்​கள் என்று தெரி​வித்த ராம​தாஸ், அதில் உறு​தி​யாக இருந்​தார். அந்த நேரத்​தில், அன்​புமணி என்​னிடம் வந்து மத்​திய அமைச்​சர் பதவி கேட்க சொன்​னார்.

நான் ராம​தாஸிடம் பேசி, ‘நீங்​கள் தான் பதவிக்கு வரமாட்​டேன் என்​கிறீர்​கள். உங்​கள் மகனை​யா​வது அமைச்​ச​ராக்​கலாம்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கட்​சி​யின் தலை​வர் என்​ப​தால் உனது விருப்​பத்​துக்கு செயல்​படு​கி​றா​யா. நான் செய்த சத்​தி​யம் என்​ன​வாகும்’ என்று என்​னிடம் கடுமை​யாக கோபப்​பட்​டார். பிறகு, காடு​வெட்டி குருவை அழைத்​துச் சென்று மீண்​டும் ராம​தாஸிடம் பேசினோம். அதன் பின்​னரே, அன்​புமணியை அமைச்​ச​ராக்க ராம​தாஸ் ஒப்​புக்​கொண்​டார். ஒரு​முறை நாடாளு​மன்ற உறுப்​பின​ராக என்னை போக சொன்ன போது கூட, அன்​புமணியை தான் பரிந்​துரைத்​தேன். அன்​புமணியை தான் மாநிலங்​களவை உறுப்​பின​ராக்​கினோம். பாமக தனித்து போட்​டி​யிட்ட போது கூட, அன்​புமணி தான் முதல்​வர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டார்.

ஆனால், அன்​புமணிக்கு எந்த கெடு​தலும் செய்​யாத என்னை பார்த்​து, அப்​பாவை​யும் என்​னை​யும் ஜி.கே.மணி பிரித்​து​விட்​டார் என அன்​புமணி கூறுகி​றார். தந்தை - மகனை நான் எப்​படி பிரிக்க முடி​யும். ராம​தாஸும், அன்​புமணி​யும் உட்​கார்ந்து பேசி​னால் தான் தீர்வு கிடைக்​கும். வீட்​டுக்​குள் பேச வேண்​டிய விஷ​யத்தை பொது​வெளி​யில் பேசி​யது தான், இவ்​வளவு பிரச்​சினை​களுக்​கும் காரணம். ராம​தாஸை கடுமை​யாக அன்​புமணி விமர்​சனம் செய்​கி​றார். அன்​புமணி மனசாட்​சி​யோடு பேச வேண்​டும். ராம​தாஸுடன் நான் இருப்​ப​தால், என்னை அன்​புமணி விமர்​சனம் செய்து வரு​கி​றார். ராம​தாஸ் பல முறை சிறை சென்​றுள்​ளார். அன்​புமணி எந்த்​தனை முறை சிறை சென்​றார்? பாமக​வில் ஏற்​பட்ட பிரச்​சினைக்கு காரணம் அன்​புமணி மட்​டும் தான். கட்​சி​யில் பிரச்​சினை இருக்​கும் போது, விருப்ப மனு வாங்​கு​வது மோசடி வேலை​யாகும்.

பாமக நிறு​வனர், தலை​வர் ராம​தாஸ் தான். பாமக​வில் எனக்கு எந்த பதவி​யும் வேண்​டாம். ராம​தாஸ் - அன்​புமணி ஒன்று சேர தயார் என்​றால், நான் கட்​சி​யில் இருந்து விலகி கொள்ள தயா​ராக இருக்​கிறேன். அன்​புமணி யார், யார் துரோகி​கள் என நினைக்​கி​றோரோ, அவர்​கள் அனை​வ​ரும் பாமக​வில் இருந்து வில​கத் தயா​ராக இருக்​கி​றோம். ராம​தாஸ் உடன் அன்​புமணி இணைந்து செயல்பட வேண்​டும். நானோ, என் குடும்​பத்​தினரோ கட்​சி​யில் இருக்க மாட்​டோம். எம்​எல்ஏ பதவியை கூட ராஜி​னாமா செய்து விடு​கிறேன். வேறு எந்த கட்​சி​யிலும் சேர மாட்​டோம். அவர்​களாக அழைத்​தால் மீண்​டும் பாமக​வில் இணை​கி​றோம்.

வன்​னியர்​களுக்​கான 10.5 சதவீத இடஒதுக்​கீட்டை நான் தான் கெடுத்​த​தாக அன்​புமணி அவதூறாக பேசி வரு​கி​றார். ஆட்சி மாற்​றம் காரண​மாக, அந்த இடஒதுக்​கீடு கிடைக்​காமல் போனது. அதற்கு நான் எப்​படி பொறுப்​பாக முடி​யும். ஆடிட்​டர் குரு​மூர்த்​தி, சைதை துரை​சாமி ஆகி​யோர் ராம​தாஸ். அன்​புமணியை சமா​தானம் செய்​வதற்​காக, தைலாபுரம் தோட்​டத்​துக்கு வந்​தனர். இரு​வ​ரும் ஒன்​றிணைய வேண்​டும் என்​பதே எனது விருப்​பம். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p>பாமக செயல்தலைவர் ஜி.கே.மணியின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது.. படம்: எல்.சீனிவாசன்</p></div>
3 மத்திய அமைச்சர்களை களமிறக்கியது பாஜக: தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in