

டேராடூன்: உத்தராண்ட் மாநிலம் ஹரித்வாரில் 2027, ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி நாளில் அர்த்த கும்பமேளா தொடங்க உள்ளது. இங்கு கங்கை நதிக் கரைகளில் 6 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவார்கள்.
இது தொடர்பாக ஹரித்வார் மேயர் கிரண் ஜெயஸ்வால் கூறும்போது, ‘‘அர்த்த கும்பமேளாவை முன்னிட்டு, இறைச்சிக் கடைகளை நகருக்கு வெளியே சராய் கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநகராட்சி ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படும்’’ என்றார்.