ராணுவம், கடற்படை, விமானப்படையில் 50% முதல் 75% அக்னி வீரர்களை நிரந்தரமாக்க திட்டம்

ராணுவம், கடற்படை, விமானப்படையில் 50% முதல் 75% அக்னி வீரர்களை நிரந்தரமாக்க திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: ராணுவம், கடற்​படை, விமானப்​படை​யில் 50 சதவீதம் முதல் 75 சதவீத அக்னி வீரர்​களை நிரந்தர பணி​யில் இணைத்​துக் கொள்ள திட்​ட​மிடப்​பட்டுள்​ளது.

கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீரின் கார்​கில் பகு​தி​யில் நடந்த இந்தியா - பாகிஸ்​தான் போரில் 3 ஆண்​டு​களுக்கு குறை​வான அனுபவம் கொண்ட இந்​திய ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் மிகச் சிறப்​பாக செயல்​பட்டு வெற்​றியை தேடி தந்​தனர்.

கார்​கில் போருக்​குப் பிறகு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதி​காரி சுப்​பிரமணி​யம், லெப்​டினென்ட் ஜெனரல் கே.கே.ஹ​சா​ரி, பாது​காப்​புத் துறை வல்​லுநர்​கள் வர்​கீஸ், சதீஷ் சந்​தி​ரா, பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோர் அடங்​கிய குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு மத்​திய அரசிடம் சமர்ப்​பித்த பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் 2022-ல் ‘அக்னி பாதை’ திட்​டம் தொடங்​கப்​பட்​டது.

இதன்​படி ராணுவம், கடற்​படை, விமானப் படை​யில் 17.5 முதல் 21 வயது வரையி​லான இரு​பாலரும் சேர்க்​கப்​பட்​டனர். அவர்​கள் ஒப்​பந்த அடிப்​படை​யில் 4 ஆண்​டு​கள் பணி​யில் நீடிப்​பார்​கள். பணித் திறனின் அடிப்​படை​யில் அவர்​களில் 25 சதவீதம் பேர் மட்​டும் நிரந்தர பணி​யில் சேர்க்​கப்​படு​வார்​கள். மற்றவர்கள் ஓய்வு பெறு​வார்​கள் என்​று அறிவிக்​கப்​பட்​டது.

இந்த சூழலில் ‘அக்னி பாதை’ திட்​டத்​தில் பணி​யாற்​றும் பெரும்​பாலான வீரர்​களை நிரந்தரப் பணி​யில் இணைத்​துக் கொள்ள திட்​ட​மிடப்​பட்டுள்​ளது. இதுகுறித்து பாது​காப்பு துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

தற்​போதைய நடை​முறை​களின்​படி 25 சதவீத அக்னி வீரர்​களை மட்​டுமே நிரந்தரப் பணியில் சேர்க்க முடி​யும். இந்த நடை​முறையை மாற்றி 50 சதவீதம் முதல் 75 சதவீத அக்னி வீரர்களை நிரந்தரப் பணி​யில் இணைத்​துக் கொள்ள திட்​ட​மிடப்​பட்டுள்​ளது. இதுதொடர்​பாக முப்​படைகளும் அளித்த பரிந்​துரைகளை பாது​காப்​புத் துறை தீவிர​மாக பரிசீலித்து வரு​கிறது.

அக்னி பாதை திட்​டத்​தில் முப்​படைகளில் பணி​யாற்றி ஓய்வு பெறும் வீரர்​களுக்கு ரூ.11.71 லட்​சம் நிதி​யுதவி வழங்​கப்​படும். அவர்​களுக்கு ஓய்​வூ​தி​யம் மட்​டும் கிடைக்​காது. பணிக்​காலத்​தில் அவர்​களுக்கு ரூ.48 லட்​சத்​துக்​கான காப்​பீடு வசதி, இதர அனைத்து சலுகைகளும் அளிக்​கப்​படு​கிறது.

மத்​திய உள்​துறை​யின் கீழ் செயல்​படும் பாது​காப்பு படைகள் மற்​றும் பல்​வேறு மாநில அரசுகளின் காவல் துறை​களில் அக்னி வீரர்​கள் சேரு​வதற்​கான சிறப்பு திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்டு உள்​ளன.

ராணுவம், கடற்படை, விமானப்படையில் 50% முதல் 75% அக்னி வீரர்களை நிரந்தரமாக்க திட்டம்
கரூர் நெரிசல் வழக்கு: தவெக தலைவர்கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in