சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்

பியூஷ் கோயல் | கோப்புப் படம்

பியூஷ் கோயல் | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேசியத் தலைவர், தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதன்படி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

சட்டம் மற்றும் நீதித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோலும் தேர்தல் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது’’ என அருண் சிங் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பியூஷ் கோயல் | கோப்புப் படம்</p></div>
“பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்த ராகுல், கார்கே மன்னிப்பு கோர வேண்டும்” - கிரண் ரிஜிஜு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in