பிலிபித் வாக்காளர் பட்டியல் முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு - தேர்தல் ஆணையம் உத்தரவு

பிலிபித் வாக்காளர் பட்டியல் முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு - தேர்தல் ஆணையம் உத்தரவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: உத்​தர பிரதேசத்​தின் பிலிபித் தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்​த​தாகப் புகார் எழுந்த நிலை​யில், வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் (ஈஆர்ஓ) இரு​வரை இடைநீக்​கம் செய்​ய​வும், அவர்​கள் மீது வழக்கு பதிவு செய்​ய​வும் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது.

மாநிலத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி (சிஇஓ) நவ்​தீப் ரின்வாவுக்கு அனுப்​பிய கடிதத்​தில், மயங்க் கோஸ்வாமி, ஹேமந்த் சவுத்ரி ஆகிய இரு அதி​காரி​களை​யும் உடனடி​யாக இடைநீக்​கம் செய்​யுமாறு ஆணை​யம் கூறியுள்​ளது. ஆணையத்தின் முன் அனுமதி​யின்றி இவர்​களை மீண்​டும் பணியில் அமர்த்தக் கூடாது என்​றும் தெரி​வித்​துள்​ளது.

இவர்​கள் இரு​வர் மற்​றும் கணினி ஆபரேட்​டர் அனில் குமார் மீதான எஃப்.ஐ.ஆர்.களில், பொது ஊழியர் சட்​டத்தை மீறு​வது தொடர்​பான பாரதிய நியாய சன்​ஹிதா பிரிவு 198-ஐ சேர்க்க ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. வழக்​கு​களை நீதி​மன்​றத்​தில் தீவிர​மாகப் பின்​தொடரு​மாறும் கூறியுள்​ளது. பிலி​பித் தொகுதியின் வாக்​காளர் பட்​டியல் ஆய்வு குறித்த அறிக்​கையை ஒரு வாரத்​துக்​குள் சமர்ப்​பிக்க ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

மாநிலத்​தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள், வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் தங்​கள் வரம்​புக்​குட்​பட்ட வாக்காளர் பட்​டியலை முழு​மையாக மறுஆய்வு செய்யவும் அறிவுறுத்​தி​யுள்​ளது.

பிலிபித் வாக்காளர் பட்டியல் முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு - தேர்தல் ஆணையம் உத்தரவு
ம.பி.யில் வினாடி வினாவில் வென்றவர்களுக்கு ராயல் என்பீல்டு பைக், டிராக்டர்கள் பரிசு

X