

போபால்: மத்திய பிரதேச அரசு, விவசாயி நல ஆண்டைக் கொண்டாடும் வகையில், மாணவர்களிடையே வினாடி வினாப் போட்டிகளை நடத்தியது. முதல்வர் மோகன் யாதவின் ‘வீர் பாரத் நியாஸ்’ மற்றும் ‘கிருஷ்ணா பாதே’ மற்றும் ‘கிசான் கல்யாண் ஸ்வாபிமான் பர்வ்’ போன்ற திட்டங்கள் மூலம் அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
பகவான் கிருஷ்ணரின் 14 வித்தைகள் மற்றும் 64 கலைகளை அடிப்படையாகக் கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்குபெற்று வெற்றி பெற்ற 102 மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
பல முஸ்லிம் மாணவர்களும் இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர். 55 மாவட்டங்களைச் சேர்ந்த 165 விவசாயிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.6.5 கோடி மதிப்பிலான டிராக்டர்கள் மற்றும் ராயல் என்பீல்டு பைக்குகள், மின்சார ஸ்கூட்டர்கள் பரிசாக வழங்கப்பட்டன.