

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘பிராமண சமூகத்தை குறிவைக்கும் வெறுப்பு பேச்சை சாதிய பாகுபாடு குற்றமாக கருத வேண்டும். பிராமண சமூகத்துக்கு எதிராக எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் வெறுப்பு பிரச்சாரம் செய்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயன், இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர்.