கோயில்களில் விலங்குகளை பலியிட தடை கோரும் மனு தள்ளுபடி

கோயில்களில் விலங்குகளை பலியிட தடை கோரும் மனு தள்ளுபடி
Updated on: 
1 min read

புதுடெல்லி: கோயில்​கள் மற்​றும் மதச் சடங்​கு​களின்​போது விலங்கு​களை பலி​யிடுவதற்​குத் தடை விதிக்​கக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக வழக்​கறிஞர் ஸ்ருதி பிஸ்ட் என்​பவர் தாக்​கல் செய்த மனுவில், “மதச் சடங்​கு​களுக்​காக விலங்​கு​களைக் கொல்வதற்கு விலங்​கு​கள் வதை தடுப்​புச் சட்​டம் 1960-ன் பிரிவு 28 வழங்​கி​யுள்ள விதி​விலக்கை நீக்க வேண்​டும். மதத்தின் பெயரால் விலங்குகளை பலியிடுவதா? மதத்​தின் பெயரால் விலங்​கு​கள் பலியிடப்​படுவதைத் தடுக்க மத்​திய அரசு உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும். விலங்​கு​களுக்​கும் வாழ்​வதற்​கான உரிமை இருப்​ப​தால், அவற்​றைப் பலி​யிடுவது அரசி​யலமைப்​புச் சட்டத்தின் பிரிவு 21-க்கு எதிரானது” என்று தெரி​வித்​திருந்​தார்.

இந்த வழக்கை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், ஆர்.மகாதேவன் மற்​றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசா​ரித்து, கடந்த மார்ச் மாதம் மத்​திய கால்நடை பராமரிப்​புத் துறை அமைச்​சகத்​திடம் விளக்​கம் கோரியிருந்​தது. இந்​நிலை​யில், வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது மனுவை தள்​ளு​படி செய்​வ​தாக நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.

கோயில்களில் விலங்குகளை பலியிட தடை கோரும் மனு தள்ளுபடி
சோத்துப்பாறை அணை மடையை திறந்து அத்துமீறிய தவெகவினர்: நீர்வளத்துறையினர் போலீஸில் புகார்

X