​கொலீஜியத்தில் நீதிபதி நிஷா பானு இடம்பெறாத விவகாரம்: மனு தள்ளுபடி

​கொலீஜியத்தில் நீதிபதி நிஷா பானு இடம்பெறாத விவகாரம்: மனு தள்ளுபடி
Updated on
1 min read

புதுடெல்லி: சென்னை உயர் நீதி​மன்ற கொலீஜி​யத்​தில் நீதிபதி நிஷா பானுவை சேர்க்​காததை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்த நிஷா பானு, கேரள உயர்​ நீ​தி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டார். ஆனாலும், அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​திலேயே நீடித்தார். குடியரசுத் தலை​வர் உத்​தரவுக்குப் பின்​னரே மாற்றலாகிச்சென்​றார்.

இடைப்​பட்டக்காலத்​தில் நடந்த கொலீஜி​யத்​தில் அவர் சேர்க்​கப்​ப​டாததை எதிர்த்து பிரேம்​கு​மார் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கொலீஜிய நடைமுறை நீதி​மன்ற விசா​ரணைக்கு உட்​பட்​டதல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in