அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க ​கோரி வழக்​கறிஞர் யானை ராஜேந்​திரன் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், “தமிழகத்​தில் 38 காவல் நிலை​யங்​களில் இருந்த 41 ஆவணங்​கள் திரு​டுபோய் உள்ளன. சிலை கடத்​தல் வழக்​கின் ஆவணங்​கள், சி.டி.க்​கள் மாய​மானது தொடர்​பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்​துள்​ளது? எப்.ஐ.ஆர் கணினிமய​மாக்​கப்​பட்டு விட்​ட​தா?

சிலைகளைக் கண்டு​பிடிக்க முடிய​வில்லை என்று பல வழக்​கு​கள் முடித்து வைக்கப்​பட்​டுள்​ளன, அதற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளை எழுப்​பியது. அதோடு, இது குறித்து விசா​ரிக்க ஒரு சிறப்பு அதி​காரி உடனடி​யாக நியமிக்​கப்​பட்​டு, வழக்​கின் விசாரணை நிலை அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டுமென தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் வழக்​கறிஞர் யானை ராஜேந்​திரன் தாக்​கல் செய்துள்ள புதிய மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​விலிருந்து கடத்​தப்​பட்ட 3,000 சிலைகள் மற்​றும் பழங்​கால கலை பொருட்​கள் அமெரிக்க அருங்​காட்​சி​யகங்​களில் உள்ளன என்று அமெரிக்காவின் உள்​நாட்டு பாது​காப்பு புல​னாய்வு பிரிவு தெரிவித்​துள்​ளது.

குறிப்​பாக, பஞ்​சலோக செம்​பியன் மாதே​வி, திரு​ஞானசம்​பந்​தர், கால பைர​வர், மகாவீரர், புத்​தர் சிலைகள் உள்​ளிட்​ட​வை​யும், விலைம​திப்​பற்ற சிவசக்தி ருத்​ராட்ச மாலை மற்​றும் பழங்​கால கலை பொருட்​களும் அமெரிக்​கா​வில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அது​போல, மகாராஜா போஜா​வால் நிறு​வப்​பட்ட 11ம் நூற்​றாண்​டின் பளிங்கு கல்​லாலான சரஸ்​வதி தேவி சிலை​யானது இங்​கிலாந்து நாட்​டில் உள்ள அருங்​காட்​சி​யகத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பழங்​கால சிலைகள் மற்​றும் கலைப்​பொருட்​களை தூதரக அளவி​லான பேச்சு வார்த்தை மூலம் இந்​தி​யா​வுக்கே கொண்டு வர வேண்​டும். அதற்கு ஏது​வாக உள்​துறை அமைச்​சகம் மற்​றும் மத்திய கலாச்​சா​ரத்​துறை அமைச்​சகத்​தை​யும் இந்த வழக்​கில் இணைத்து உரிய உத்​தரவை பிறப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்​.

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in