

திருவனந்தபுரம்: கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூடைல் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையை நிறுத்தக் கோரி அந்நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைக் கேரள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும், ஜூன் 5-ம் தேதி வரை அந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீதான விசாரணையை நடத்த அனுமதி அளித்து உள்ளது.