டெல்லி மெட்ரோ ரயிலில் இருக்கை தகராறில் பயணி உயிரிழப்பு

டெல்லி மெட்ரோ ரயிலில் இருக்கை தகராறில் பயணி உயிரிழப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த பவன் சர்மாவும் (48), அவரது தாயார் துர்கா தேவியும் (65) கடந்த 8-ம் தேதி குருகிராமில் இருந்து டெல்லி யமுனா விஹாரில் உள்ள தங்கள் வீட்டுக்கு மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பிரதாப் சிங்கும், அவரது மகன் வழக்கறிஞரான சித்தார்த்தும் மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறினர். முதியோருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் யார் அமர்வது என்பது தொடர்பாக அவர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கோபம் அடைந்த சஞ்சய் பிரதாப் சிங் கடுமையாக தாக்கியதில் பவன் சர்மா உயிரிழந்தார். இதுகுறித்து சஞ்சய் பிரதாப் சிங், அவரது மகன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி மெட்ரோ ரயிலில் இருக்கை தகராறில் பயணி உயிரிழப்பு
பிரதமர் நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்த விவகாரம்: ‘நாட்டுக்குத் தேவையான பிரச்சினையா?’ - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in