குஜராத் - அகமதாபாத்தில் நடந்த கேளிக்கை விருந்தில் வெளிநாட்டு மது வகை, ஹுக்கா விநியோகம்

மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உட்பட 81 பேர் சிக்கினர்
குஜராத் - அகமதாபாத்தில் நடந்த கேளிக்கை விருந்தில் வெளிநாட்டு மது வகை, ஹுக்கா விநியோகம்
Updated on
1 min read

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடந்த கேளிக்கை விருந்​தில் வெளி​நாட்டு மது​வகைகள், ஹுக்கா விநியோகம் செய்​யப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. இந்த விருந்​தில் கலந்​து​கொண்ட மருத்​து​வர்​கள், தொழில​திபர்​கள் உட்பட 81 பேர் சிக்​கி​யுள்​ளனர்.

குஜ​ராத் மாநிலத்​தில் பூரண மது​விலக்கு சட்​டம் அமலில் உள்​ளது. அங்கு வெளி​நாட்​டினர் மற்​றும் அனு​மதி பெற்​றவர்​கள் மது அருந்த முடி​யும் என்ற நிலை உள்​ளது. இந்​நிலை​யில் அகமதாபாத்தில் உள்ள நிர்​வாணா கிரீன்ஸ் வீக்​கெண்ட் ஹோம்ஸ் என்ற தனி​யார் விடு​தி​யில் நேற்று முன்​தினம் அனுமதியின்றி மது விருந்து நடை​பெறு​வ​தாக போலீ​ஸாருக்​குத் தகவல் வந்​தது. இதையடுத்து போலீ​ஸார் அங்கு சென்று சோதனை நடத்​தினர்.

அப்​போது அங்கு அனு​ம​தி​யின்றி வெளி​நாட்டு மது​வகைகள், ஹுக்கா ஆகியவை விருந்​தினர்​களுக்கு விநி​யோகம் செய்யப்பட்டது தெரிய​வந்​தது. இதையடுத்து அந்த விருந்​தில் கலந்​து​கொண்ட 81 பேரை போலீ​ஸார் பிடித்து விசா​ரித்​தனர். இதில் 43 பேர் ஆண்​கள், 38 பேர் பெண்​கள். இதில் பலர் கட்​டிட நிறுவன அதிபர்​கள்,மருத்​து​வர்​கள், தொழில​திபர்​கள் என விசாரணை​யில் தெரிய​வந்​தது. அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஒரு தொழில​திபரின் 25ம் ஆண்டு திரு​மணக் கொண்​டாட்​டத்​துக்​காக இந்த விருந்து ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அங்​கிருந்த வெளி​நாட்டு மது​வகைகள், ஹுக்கா பைப்​பு​கள், 20-க்கும் மேற்​பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்​கள் பறி​முதல் செய்யப்​பட்​டன. இது தொடர்​பாக அகம​தா​பாத்​ சனந்த் போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். மது விலக்கு அமலில் உள்ள மாநிலத்​தில் தனி​யார் விடு​தி​யில் அனு​ம​தி​யின்றி மது​வகைகள் பரி​மாறப்​பட்​டது அப்​பகு​தி​யில் பெரும் பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

குஜராத் - அகமதாபாத்தில் நடந்த கேளிக்கை விருந்தில் வெளிநாட்டு மது வகை, ஹுக்கா விநியோகம்
அல் பலா பல்கலை. தாளாளர் மோசடி வழக்கில் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in