“நீட் விவாதத்தில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

நாடாளுமன்றம் தொடர் அமளியால் 4-வது நாளாக முடக்கம்:
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டம் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் நேற்று நடைபெற்றது. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதை கண்டித்து ஆளும் கட்சியினரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சியினரும் எதிர் எதிராக நின்று கோஷம் எழுப்பினர். முதல் படம்: என்டிஏ எம்.பி.க்கள் நடத்திய போராட்டம்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டம் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் நேற்று நடைபெற்றது. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதை கண்டித்து ஆளும் கட்சியினரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சியினரும் எதிர் எதிராக நின்று கோஷம் எழுப்பினர். முதல் படம்: என்டிஏ எம்.பி.க்கள் நடத்திய போராட்டம்.

Updated on
2 min read

புதுடெல்லி: ​​நா​டாளு​மன்​றத்​தில் நேற்று எதிர்​க்கட்​சிகளின் அமளி மற்​றும் போராட்​டம் தொடர்ந்​த​தால் 4-வது நாளாக இரு அவை​களும் முடங்​கின. நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் முன்​நிபந்​தனை​களை விதித்​து, விவாதத்​தில் இருந்து தப்​பியோட எதிர்க்​கட்​சிகள் முயற்​சிப்​ப​தாக நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு குற்​றம்​சாட்​டி​னார்.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்​கியது. அன்று முதல் நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரம், மாணவர்​கள் போராட்​டம் காரண​மாக நாடாளு​மன்​றம் தொடர்ந்து ஒத்​திவைக்​கப்​பட்டு வரு​கிறது. நாடாளு​மன்​றம் நேற்று காலை 11 மணிக்கு வழக்​கம் போல் தொடங்​கியது.

மாநிலங்​களவை நடவடிக்​கைகள் தொடங்​கிய​போது, நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு பேசுகை​யில், “நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரம் குறித்து உடனடி​யாக விவா​திக்க அரசு தயார். அதற்கு எதிர்க்​கட்​சிகள் எவ்​வித நிபந்​தனை​யும் விதிக்​கக் கூடாது” என்​றார்.

இதற்கு பதில் அளித்த எதிர்க்​கட்சி தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ”இந்த விவ​காரத்​தில் விவாத​ம் தொடங்​கு​வதற்கு முன்​பாக அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்ய வேண்​டும். அப்​போது​தான் விவாதம் நடை​பெற அனு​ம​திப்​போம்” என்​றார்.

இதையடுத்து அவை​யில் இருதரப்​பினரும் தொடர்ந்து முழக்​கங்​கள் எழுப்​பினர். இதனால் மாநிலங்​கள​வைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன், அவையை மதி​யம் 12 மணி வரை ஒத்​தி​வைத்​தார். மாநிலங்​களவை மதி​யம் 12 மணிக்கு மீண்​டும் கூடிய​போது, எதிர்க்​கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பேசுகை​யில், “காவல் ​துறை​யின் தடியடி காரண​மாக பல மாணவர்​கள் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதனால் அவர்​களது பெற்​றோர் கடும் அதிர்ச்​சி​யில் உள்​ளனர். அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் முதலில் ராஜி​னாமா செய்​தால் மட்​டுமே விவாதத்​திற்கு எதிர்க்​கட்​சிகள் தயார். இது குறித்து அரசு விளக்​கம் அளிக்க வேண்​டும்” என்​றார். இதற்கு பதிலளித்த அவைத் தலை​வர் ஜே.பி.நட்​டா, “எதிர்க்​கட்​சிகளின் இந்த நடத்தை மிக​வும் பொறுப்​பற்​றது.

அவர்​கள் விவாதம் நடத்​த​வும் விரும்​ப​வில்​லை; அவையை இயங்க விட​வும் இல்​லை. முதலில் வினாத்​தாள் கசிவு குறித்து விவா​திக்​கச் சொன்​னார்​கள், நாங்​களும் நீட் மற்​றும் இதர பிரச்​சனை​கள் குறித்து விவா​திக்​கத் தயார் என்​று​தான் கூறினோம்” என்​றார். அமளி தொடர்ந்​த​தால் மாநிலங்​கள​வைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவையை பிற்​பகல் 2 மணி வரை ஒத்​தி​வைத்​தார்.

<div class="paragraphs"><p>இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டம்.</p></div>

இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டம்.

மக்​களவையில்..

இதே​போல் மக்​களவை​யிலும் கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானின் ராஜி​னா​மாவை வலி​யுறுத்​திய எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் கோஷம் எழுப்​பினர். அப்​போது குறுக்​கிட்ட நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு, “இந்த விவாதத்​தின் போது மத்​திய அரசு தனது தரப்பு நியா​யங்​களை முன்​வைக்க விரும்​பு​கிறது.

எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் எவ்​வளவு நேரம் வேண்​டு​மா​னாலும் பேசலாம். இந்த விவாதம் இரண்டு நாட்​கள் வரை கூட நடக்​கலாம். இரு அவை​களி​லும் விவாதம் நடை​பெறும் தேதி மற்​றும் கால அளவை எதிர்க்​கட்​சிகளே முடிவு செய்​ய​லாம். விவாதம் நடத்​து​வது தொடர்​பாக காங்​கிரஸ் மற்​றும் பிற எதிர்க்​கட்​சிகளை அரசு அணுகி​யுள்​ளது” என்​றார்.

மக்​களவை​யில் ஏற்​பட்ட அமளி காரண​மாக மதி​யம் 12 மணி வரை அவை ஒத்​தி வைக்​கப்​பட்​டது. அவை மீண்​டும் கூடியதும், எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் முழக்​கங்​களை எழுப்பி போஸ்​டர்​களைக் காட்​டினர். பல உறுப்​பினர்​கள் அவை​யின் மையப் பகு​திக்​குச் சென்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் 10 நிமிடங்​களில் அவை மீண்​டும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானின் ராஜி​னாமா கோரிக்​கையை வலி​யுறுத்தி எதிர்க்​கட்​சிகள் போராட்​டம் நடத்​தி​ய​தால், தொடர்ச்​சி​யாக நேற்று 4-வது நாளாக மக்​களவை​யில் கேள்வி நேர​மும், பூஜ்ஜிய நேர​மும் பாதிக்​கப்​பட்​டன. இதனால் விவாதம் நடத்​தவேண்​டிய தேதி மற்​றும் கால அளவு குறித்து ஆலோ​சிக்க எதிர்க்​கட்சி தலை​வர்​கள் தன்னை சந்​திக்க வேண்​டும் என மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்லா கூறி​னார்.

நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​கள் மதி​யம் 2 மணிக்கு கூடிய​போதும் எதிர்க்​கட்​சிகளின் அமளி மற்​றும் போராட்​டம் தொடர்ந்​தது. இதனால் இரு அவை​களும் நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டன.

நீட்​தேர்வு விவ​காரத்​தால் நாடாளு​மன்​றம் கடந்த 4 நாட்​களாக முற்​றி​லும் முடங்​கியது. இது குறித்து கருத்து தெரி​வித்த அமைச்​சர் கிரண் ரிஜிஜு, ” நீட் தேர்வு வினாத்​​தாள் கசிவு விவ​காரத்​தில் முன்​நிபந்​தனை​களை விதித்​து, விவாதத்​தில் இருந்து தப்​பியோட எதிர்​க்​கட்​சிகள் முயற்சி செய்​கின்​றன’’ என்​றார்.

சபாநாயகருடன் ராகுல் சந்திப்பு

மக்களவையில் சபாநாயகர் விடுத்த அழைப்பை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சவுகதா ராய் மற்றும் மஹுவா மொய்த்ரா ஆகியோரும் உடன் சென்றனர். அரசு விவாதத்துக்குத் தயாராக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பரிந்துரைக்கும் அவை விதிகளின் கீழ் விவாதத்துக்கு அனுமதிப்பதாக அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>நீட் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டம் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் நேற்று நடைபெற்றது. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதை கண்டித்து ஆளும் கட்சியினரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சியினரும் எதிர் எதிராக நின்று கோஷம் எழுப்பினர். முதல் படம்: என்டிஏ எம்.பி.க்கள் நடத்திய போராட்டம். </p></div>
‘முகம்’ தலை​வர்​ மு​காமின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in