ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாக். கூறுவது பொய்: 36 விமானங்களும் சேவையில் இருப்பதாக இந்தியா உறுதி

ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாக். கூறுவது பொய்: 36 விமானங்களும் சேவையில் இருப்பதாக இந்தியா உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: ரஃபேல் விமானங்​களை சுட்டு வீழ்த்​தி​ய​தாக பாகிஸ்தான் கூறு​வது பொய் என்​றும், 36 ரஃபேல் விமானங்​களும் இந்திய விமானப்படை சேவை​யில் இருப்​ப​தாக​வும் இந்தியா தெரிவித்​துள்​ளது.

கடந்த ஆண்டு பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு, மே 6-ம் தேதி இரவு, இந்​திய ராணுவம், பாகிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்​துள்ள தீவிர​வாத முகாம்களைகுறி வைத்து ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்​தி​யது. இதன் பிறகு, இரு நாடு​களுக்​கும் இடையே ராணுவ மோதல் தொடங்​கியது.

இந்த மோதல், மே 10-ம் தேதி மேற்​கொள்​ளப்​பட்ட சண்டை நிறுத்த ஒப்​பந்​தத்​துக்​குப் பிறகு முடிவுக்கு வந்​தது. அப்​போது இந்​தி​யாவின் 5 ரஃபேல் போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தி​ய​தாக பாகிஸ்​தான் தெரி​வித்​தது. அதை இந்​தியா திட்​ட​வட்​ட​மாக மறுத்​தது. இந்நிலையில் ரஃபேல் விமானங்​களை பாகிஸ்​தான் வீழ்த்தியதாகக் கூறு​வது பொய் என்​றும், இந்​தி​யா​வின் விமானப்படை​யில் இருக்​கும் 36 ரஃபேல் விமானங்​களும் சேவையில் இருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக இந்​திய விமானப்​படை (ஐஏஎஃப்) வெளி​யிட்​டுள்ள ஆவணத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: 2016-ல் இந்​தியா மற்​றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே கையெழுத்​தான ஒப்​பந்​தத்​தின்​படி வாங்​கப்​பட்ட அதே எண்​ணிக்​கையி​லான, அதாவது அனைத்து 36 ரஃபேல் போர் விமானங்​களும் சேவை​யில் உள்​ளன. இந்த விமானங்​களைப் பராமரிப்​ப​தற்​கான 5 மாத கால ‘பிரிட்ஜ் சப்​போர்ட்' தொகுப்​புக்​கான ஏலம் மீண்​டும் கோரப்​பட்​டுள்​ளது.

இந்த ஆண்டு செப்​டம்​பருக்​குப் பிறகும் விமானங்​களின் செயல்​பாட்​டைத் தொடர்​வதற்​கான பராமரிப்​பு, தளவாடங்​கள் மற்​றும் தொழில்​நுட்ப ஆதரவை இந்த ஆவணம் கோரி​யுள்​ளது. மேலும் இந்த 5 மாத ஆதர​வுக் காலத்​தில் சுமார் 2,250 மணி நேரத்​துக்கு விமானங்​கள் பறப்​ப​தற்​கான நேர​மும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. நீண்டகால ஆதரவு ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​படும் வரை தடையற்ற செயல்​பாடு​களை உறுதி செய்​வதே இந்த ‘பிரிட்ஜ் சப்போர்ட்' ஏற்​பாட்​டின் நோக்​க​மாகும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

இதன்​மூலம் எந்த ஒரு ரஃபேல் விமான​மும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது. பஹல்​காம் தீவிர​வாதத் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக இந்​தியா மேற்​கொண்ட ராணுவ நடவடிக்​கை​யான ஆபரேஷன் சிந்​தூரின்போது பல இந்திய ரஃபேல் விமானங்​கள் அழிக்​கப்​பட்​ட​தாக பாகிஸ்​தான் முன்​வைத்த வாதத்தை இந்த ஆவணம் நேரடி​யாக மறுப்​பது குறிப்பிடத்​தக்​கது. ஏதேனும் விமான இழப்பு ஏற்​பட்​டிருந்​தால், பராமரிப்பு முன்​மொழி​வில் குறிப்​பிடப்​பட்​டுள்ள வி​மானங்​களின் எண்​ணிக்​கை குறை​வாகவே இருந்​திருக்​கும்​ என்​பது கவனிக்கத்தக்​கது.

ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாக். கூறுவது பொய்: 36 விமானங்களும் சேவையில் இருப்பதாக இந்தியா உறுதி
தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; மத்திய அரசுடன் மோதலை விரும்​ப​வில்​லை: முதல்வர் விஜய் திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in