

அகமதாபாத்: இந்திய கடல் பகுதியில் திரிந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படை சுற்றிவளைத்து, அதில் இருந்து 11 பேரை சிறைபிடித்தது.
குஜராத் கடல் பகுதியில் கடலோர காவல் படை நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் இந்திய கடல் பகுதியில் திரிந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை சுற்றிவளைத்து, அதில் இருந்த 11 பேரை சிறை பிடித்தது.
இந்த 11 பேரும் குஜராத்தின் ஜகாவ் கடல்சார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக இவர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது.