

கோப்புப்படம்
ஜம்மு: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டம் கிம்மா பகுதியைச் சேர்ந்தவர் ஷேனாஸ் அக்தர் (35). இவருக்கும், இவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஷேனாஸ் அக்தர், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்குள் புகுந்தார். இதையடுத்து அந்தப் பெண்ணை ராணுவத்தினர் பிடித்து விசாரணை நடத்தினர். வீட்டில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பூஞ்ச் பகுதிக்குள் நுழைந்ததாக தெரிவித்தார்.