இந்திய படை​யினரின் தீவிர கண்காணிப்​பில் இருந்து தப்பிக்க தீவிர​வா​தி​களை அரசியல் கட்சியில் சேர அறிவுறுத்திய பாக். ஐஎஸ்ஐ

இந்திய படை​யினரின் தீவிர கண்காணிப்​பில் இருந்து தப்பிக்க தீவிர​வா​தி​களை அரசியல் கட்சியில் சேர அறிவுறுத்திய பாக். ஐஎஸ்ஐ
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தான் உளவுப் பிரிவு மற்​றும் அங்​குள்ள தீவிரவாத அமைப்​பு​களுக்கு ஆதர​வாக ஜம்மு காஷ்மீரில் பலர் பணி​யாற்​றுகின்​றனர். இவர்​களின் தீவிர​வாத நடவடிக்​கைக்​குத் தேவை​யான அனைத்து பணி​களி​லும் ஈடு​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில் இதுபோல் செயல்​படும் நபர்​கள் சிலரை ஜம்மு காஷ்மீர் போலீ​ஸார் சிலர் பிடித்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் பாகிஸ்​தான் உளவுப்​பிரிவு ஐஎஸ்ஐ அமைப்​பின் பல சதி திட்​டங்​கள் அம்​பல​மாகி​யுள்ன. காஷ்மீரில் தீவிர​வாத நடவடிக்​கை​யில் ஈடு​படும் நபர்​களை தேசிய அரசி​யல் கட்சிகளில் சேர்ந்து உறுப்​பினர் அட்டை பெறும்​படி பாகிஸ்​தான் ஐஎஸ்ஐ அறி​வுறுத்​தி​யுள்​ளது. அப்​போது​தான் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனைக்கு உட்​ப​டா​மல் எளி​தில் தப்பிக்கலாம், ஆயுதங்​களை எளி​தாக கடத்​திச் செல்​லலாம் என கூறி​யுள்​ளனர்.

இதுகுறித்து முன்​னாள் டிஜிபி எஸ்​.பி.​வைத் கூறும்போது, ‘‘இதுபோன்ற சதித் திட்​டங்​கள் பாது​காப்புப் படை​யினரின் கண்​காணிப்​பில் இருந்து தப்​பிக்க ஓரளவு உதவலாம். சோதனையின்போது அரசி​யல் கட்​சிகளின் உறுப்​பினர் அட்டைகள் பாது​காப்பு கேடய​மாக விளங்​கு​கிறது.

இது​போல் தீவிர​வா​தி​கள் ஆயுதங்​களை கடத்​தி​ய​போது அரசி​யல் கட்சி உறுப்​பினர் என்ற அடை​யாள அட்​டைகளை காட்​டிய சம்பவம் இதற்கு முன்​பும் நடை​பெற்​றுள்​ளது’’ என்றார். பாது​காப்பு படை​யினர் மேற்​கொள்​ளும் தீவிர தேடுல் வேட்​டை​யில் காஷ்மீரில் செயல்​படும் பல தீவிர​வாத அமைப்​பு​களின் கமாண்டர்​கள் பலர் கொல்​லப்​பட்​டுள்​ளனர். இதனால் தீவிர​வாத நடவடிக்​கைக்கு உதவும் நபர்​களை அரசி​யல் கட்​சிகளில் இணையும்​படி ஐஎஸ்​ஐ அறி​வுறுத்​தி​யுள்​ள​தாக தெரிகிறது.

இந்திய படை​யினரின் தீவிர கண்காணிப்​பில் இருந்து தப்பிக்க தீவிர​வா​தி​களை அரசியல் கட்சியில் சேர அறிவுறுத்திய பாக். ஐஎஸ்ஐ
உ.பி. மதரஸா வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கவுரவிக்கிறார் முதல்வர் யோகி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in