பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த வழக்கு - தீவிரவாதிகள் சீனாவில் கேமரா வாங்கியது அம்பலம்

சட்ட உதவி கோர என்ஐஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த வழக்கு - தீவிரவாதிகள் சீனாவில் கேமரா வாங்கியது அம்பலம்
Updated on
2 min read

ஜம்மு: காஷ்மீரின் பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிரவாதிகள், சீனா​வில் அதிநவீன கேம​ரா​ வாங்​கியது கண்​டு​பிடிக்கப்பட்டுள்​ளது. இது குறித்து சீனா​விடம் உதவி​கள் கோர தேசிய புல​னாய்வு ஏஜென்​சிக்கு நீதி​மன்​றம் அனு​மதி வழங்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஆண்டு ஏப்​ரல் 22ம் தேதி பாகிஸ்​தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிர​வா​தி​கள் தாக்குதல் நடத்​தினர். இதில் சுற்​றுலா பயணி​கள் 25 பேர், உள்​ளூர் குதிரை பராமரிப்​பாளர் ஒரு​வர் என 26 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து தேசிய புல​னாய்வு ஏஜென்சி (என்​ஐஏ) விசா​ரணை நடத்தி வரு​கிறது. பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு என்ஐஏ அதிகாரி​கள் காஷ்மீர் முழு​வதும் தீவிர சோதனை நடத்​தினர்.

அப்​போது ‘கோ புரோ’ கேமரா உட்பட அதிநவீன கருவி​கள் கைப்​பற்​றப்​பட்​டன. அவற்றை ஆய்வு செய்தபோது, பஹல்​காமில் தாக்குதல் நடத்​து​வதற்கு முன்பே சீனா​வின் டாங்​கு​வான் நகரில் கேமரா வாங்​கி​யிருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இந்​தத் தகவலை ஜம்​மு​வில் உள்ள விசா​ரணை நீதி​மன்​றத்​தில் என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, விசா​ரணை​யின் அடுத்​தகட்​ட​மாக சீனா​விடம் உதவி கோர நீதி​மன்​றத்​தில் இருந்து சட்​டப்​பூர்​வ​மான அனு​மதி கடிதம் அனுப்ப வேண்​டும் என்று என்ஐஏ கோரியது. அதை ஏற்று கடந்த திங்​கட்​கிழமை நீதி​மன்​றம் அனு​மதி அளித்​தது. இந்த கடிதம் விரை​வில் மத்​திய வெளி​யுறவுத் துறை மூலம் சீன அரசுக்கு ஆதா​ரங்​களு​டன் அனுப்பி வைக்​கப்பட உள்​ளது.

இந்த கேமரா மற்​றும் அதிநவீன கருவி​களை வாங்​கியது யார், அந்த கேமரா கடைசி​யில் தீவிர​வா​தி​களின் கைகளுக்கு எப்​படி சென்​றது என்​பதை கண்​டு​பிடிக்க உதவும்​படி இந்த கடிதம் மூலம் சீன அரசை என்ஐஏ கேட்​டுக் கொள்​ளும். இதுதொடர்​பாக என்ஐஏ டிஐஜி சந்​தீப் சவுத்ரி அனுப்பிய கோரிக்​கைக்கு மத்​திய உள்​துறை அமைச்​சகம் ஏற்​கெனவே அனு​மதி வழங்கி விட்​டது.

இப்​போது நீதி​மன்​ற​மும் அனு​மதி வழங்கி உள்​ள​தால், விரை​வில் சீன அரசிடம் உதவி கேட்டு சட்​டப்​பூர்​வ​மான கடிதம் அனுப்பி வைக்​கப்​படும். ‘கோ புரோ ஹீரோ 12 பிளாக் கேம​ரா’ மாடல், எண் சி 3501 3254 71706 உட்பட பல்​வேறு கருவி​களை காஷ்மீரில் என்ஐஏ அதி​காரி​கள் கைப்​பற்றி உள்​ளனர். இதில், சீனா​வில் கேமரா வாங்கி பஹல்​காம் தாக்​குதலுக்​குத் தீவிர​வா​தி​கள் பயன்​படுத்தி உள்​ளனர்.

இது குறித்து கோ புரோ பிவி கம்​பெனிக்கு விவரம் கேட்டு என்ஐஏ ஏற்​கெனவே கடிதம் அனுப்பி இருந்​தது. அதற்கு கோ புரோ பிவி கம்​பெனி அனுப்​பிய பதிலில், ”சம்​பந்​தப்​பட்ட கேமரா சீனா​வில் விநி​யோகஸ்​த​ராக செயல்​படும் ஏஇ குரூப் இன்​டர்​நேஷனல் லிமிடெட் நிறு​வனத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

பின்​னர் அந்த கேமரா குவாங்​டாங் மாகாணம் டாங்​கு​வான் நகரில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ஆக்டிவேட் செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், விநி​யோகஸ்​தரிடம் பொருட்​கள் சென்ற பிறகு, அவற்றை யார் யார் வாங்​கு​கிறார், யார் பயன்​படுத்​துகிறார்​கள் போன்ற விவரங்​கள் எங்​களிடம் கிடை​யாது. கேம​ராவை வாங்​கியது யார் என்​பதை கண்​டு​பிடிக்க வேண்​டு​மா​னால் சீன அதி​காரி​களால்​தான் முடி​யும்” என்று கூறிவிட்​டது.

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த வழக்கு - தீவிரவாதிகள் சீனாவில் கேமரா வாங்கியது அம்பலம்
ஸ்ரீநகர் மத்திய சிறை கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி நியமனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in