66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
Updated on
2 min read

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று நடந்த விழா​வில் 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன.

கலை, இலக்​கி​யம், கல்​வி, விளை​யாட்​டு, மருத்​து​வம், சமூக சேவை, அறி​வியல், பொறி​யியல், மத்​திய அரசுப் பணி, தொழில் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் சிறந்து விளங்​கு​வோருக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கிறது. இதன்​படி நடப்பு 2026-ம் ஆண்​டுக்​கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி​யில் அறிவிக்​கப்​பட்​டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன. ஒட்​டுமொத்​த​மாக 131 பேர் விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இதில் 66 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நடந்த விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, மத்​திய அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 66 பேருக்​கும் விருதுகளை வழங்​கி​னார்.

சென்னை இசை கலைஞர் ராஜம்: மறைந்த பாலிவுட் நடிகர் தர்​மேந்​திரா சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் வழங்​கப்​பட்​டது. அவரது சார்​பாக அவரது மனைவி நடிகை ஹேம​மாலினி எம்​.பி. விரு​தினை பெற்​றுக் கொண்​டார். சென்​னையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் என். ராஜம், பத்ம விபூஷண் விரு​தினை பெற்​றுக் கொண்​டார்.

கர்​நாட​காவை சேர்ந்த கணேஷ், உத்​த​ராகண்ட் முன்​னாள் முதல்​வர் பகத்​சிங் கோஸ்​யாரி, மகா​ராஷ்டி​ராவை சேர்ந்த தொழில​திபர் உதய் சுரேஷ்கு​மார் கோனக், இந்​திய ஒலிம்​பிக் சங்க முன்​னாள் தலை​வர் வி.கே. மல்​கோத்ரா (மறைவு), சென்​னையை சேர்ந்த மூத்த மருத்​து​வர் கள்​ளிப்​பட்டி ராம​சாமி பழனி​சாமி, மகா​ராஷ்டி​ராவை சேர்ந்த விளம்பர துறை நிபுணர் பியூஷ் பாண்டே (மறைவு) ஆகியோ​ருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டது.

பத்ம ஸ்ரீ விருதுகள்: பிஹாரை சேர்ந்த நாட்​டுப்​புற நடனக் கலைஞர் விஷ்வ பந்து (மறைவு), பிஹாரை சேர்ந்த நாட்​டுப்​புற பாடகர் பரத் சிங் பார்​தி, இந்​திய கிரிக்​கெட் வீராங்​கனை ஹர்​மன்​பிரீத் கவுர், குஜ​ராத்தி மொழி எழுத்​தாளர் ரத்​திலால் போரி​சாகர், மேற்​கு​வங்​கத்தை சேர்ந்த தபேலா கலைஞர் குமார் போஸ், ராஜஸ்​தானை சேர்ந்த ஆன்​மிக தலை​வர் சுவாமி பிர​காம் தேவ், கேரளாவை சேர்ந்த சமூக சேவகர் தேவகி அம்​மாள் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்: முன்​னாள் அமைச்​சர் எச்​.​வி. ஹண்​டே, மகா​ராஷ்டி​ராவை சேர்ந்த நாட்​டுப்​புற இசைக் கலைஞர் ரகு​வீர் கேத்​கர், தமிழகத்​தின் நீல​கிரியைச் சேர்ந்த கிருஷ்ணன் (மறைவு), ஜெர்​மனியை சேர்ந்த இசை ஆய்​வாளர் லார்ஸ் கிறிஸ்​டியன் கோச், யுஜிசி முன்​னாள் வேந்​தர் ஜெகதீஷ் குமார், தமிழக காவல் துறை முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி விஜயகுமார், மேற்​கு​வங்​கத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஹரி​மாதவ் முகோ​பாத்​யாய், மகா​ராஷ்டி​ராவை சேர்ந்த தொழில​திபர் சத்​ய​நா​ராயண் நந்​தலால் நுவால், புதுச்​சேரியை சிலம்​பம்​ வீரர்​ பழனிவேல்​, தமிழகத்​தைச் சேர்ந்த எழுத்​தாளர் சிவசங்​கரி, சமூக வானொலி​யின் தந்தை என்​றழைக்​கப்​படும் ஸ்ரீதர், ஓது​வார் சுவாமி​நாதன் ஆகியோர் பத்ம ஸ்ரீ விரு​தினை பெற்​றுக் கொண்​டனர்.

66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in