வாராணசியில் ரூ.100 கோடியில் பிரம்மாண்ட பூங்கா - 130 அடியில் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் நிறுவ திட்டம்

வாராணசியில் ரூ.100 கோடியில் பிரம்மாண்ட பூங்கா - 130 அடியில் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் நிறுவ திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் உள்ள புனித நகரங்​களில் காசி எனும் வாராணசி மிக​வும் பிரசித்தி பெற்​றது. பிரதமர் மோடி​யின் மக்​களவை தொகு​தி​யான இங்கு பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அவற்​றில் ஒன்​றாக ரூ.100 கோடி​யில் 20 ஏக்​கரில் வாராணசி​யின் பேலுபூர் பகு​தி​யில் ஆக்​சிஜன் பூங்கா உரு​வாக்​கப்​படு​கிறது. மாநக​ராட்சி சார்​பில் ‘சிவ தீம் பார்க்’ என்ற பெயரில் இந்​தப் பூங்கா அமை​கிறது. இந்​தப் பூங்​கா​வில் காசி விஸ்​வ​நாதர் கோயில் சிவபெரு​மான் கருப்​பொருளாக இருப்​பார். உலகத் தரத்தில் இந்​தப் பூங்கா அமைகிறது. அடுத்த 8 முதல் 9 மாதங்களுக்​குள் இந்​தப் பூங்காவில் பிரம்​மாண்ட நடை​பாதை, குழந்​தைகளுக்​கான நவீன ஊஞ்​சல்​கள், திறந்​தவெளி கலைக்​கூடம், முதி​யோர் நூல​கம், பிரம்மாண்ட வாகன நிறுத்​து​மிடம் மற்றும் உணவு அரங்​கம் ஆகியவை இடம்​பெறும்.

மேலும், காசி​யைச் சேர்ந்த பத்ம விருது பெற்ற ஆளு​மை​கள் மற்றும் முக்​கியப் பிர​முகர்​களின் சாதனை​களும் இங்கு காட்​சிப்​படுத்​தப்​படும். இளைஞர்​கள் மற்​றும் குழந்​தைகளை விண்​வெளி அறி​வியல் மற்​றும் வானியல் துறை​யில் ஈர்க்​கும் வகை​யில், இங்கு ஒரு கோளரங்​கம் அமைக்​கப்பட உள்​ளது. பார்​வை​யாளர்​களுக்கு ஆன்​மிக அமை​தியை அளிக்​கும் வகை​யில் இப்​பூங்கா வடிவமைக்கப்​படும். இது வழி​பாட்டு தலமாக இருப்​பதுடன் சுற்றுச்​சூழல், அறி​வியல் மற்​றும் நகர்ப்​புறச் சுற்​றுலா​வுக்​கான ஒரு முக்​கிய மைய​மாக​வும் அமை​யும்.

காசி​யின் தொன்​மை​யான பாரம்​பரி​யம், வரலாற்​றுச் சிறப்புமிக்க கோயில்​கள் மற்​றும் புராணக் கதைகளை எடுத்துரைக்​கும் வகை​யில், இங்கு ஒரு நவீன டிஜிட்​டல் அருங்காட்சி​யகம் அமைக்​கப்​படு​கிறது. முக்​கிய​மாக 130 அடி உயரத்​தில் உலகில் மிக உயர​மான சிவலிங்​கம் இங்கு அமைக்கப்படு​கிறது. தற்​போது, கேரளா​வின் செங்​கலில் 111 அடி மகாலிங்​கம் உள்​ளது.

பிஹாரின் கிழக்கு சம்​ப​ரானில் கட்​டப்​பட்டு வரும் விராட் ராமாயணக் கோயி​லிலும் ஒரு சிவ லிங்​கம் அமை​கிறது. ஒற்​றைக் கல்​லால் ஆன இந்த சிவலிங்​கம் 33 அடி உயரம் கொண்​டது. இதை தமிழ்​நாட்​டின் மகாபலிபுரத்​தில் உள்ள சிற்​பிகள் வடித்து சமீபத்தில் பிஹார்​ அனுப்​பியது குறிப்​பிடத்​தக்​கது.

வாராணசியில் ரூ.100 கோடியில் பிரம்மாண்ட பூங்கா - 130 அடியில் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் நிறுவ திட்டம்
தென்கிழக்கு ஆசிய சைபர் மோசடி முகாம்களுக்கு இந்திய இளைஞர்களை கடத்திய வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in