தென்கிழக்கு ஆசிய சைபர் மோசடி முகாம்களுக்கு இந்திய இளைஞர்களை கடத்திய வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகள் கைது

தென்கிழக்கு ஆசிய சைபர் மோசடி முகாம்களுக்கு இந்திய இளைஞர்களை கடத்திய வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகள் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: வெளி​நாடு​களில் அதி​கச் சம்​பளத்​துடன் கூடிய வேலை தரு​வ​தாக கூறி, இந்​திய இளைஞர்​களை தென்​ கிழக்கு ஆசி​யா​வில் உள்ள சைபர் மோசடி முகாம்​களுக்கு கடத்​திய வழக்கில் 2 முக்​கிய குற்​ற​வாளி​களை சிபிஐ கைது செய்​துள்​ளது. இவர்​கள் நிபேந்​தர் சவுத்​ரி, நீலேஷ் நர்​பத்​சின் புரோகித் என அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர்.

இது குறித்து சிபிஐ அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்​திய இளைஞர்களை தென்​கிழக்கு ஆசிய நாடு​களுக்கு கடத்​திய ஏஜெண்​டு​கள் மற்​றும் உதவி​யாளர்​களின் நெட்​வொர்க்கை இந்த விசா​ரணை வெளிச்​சத்​துக்கு கொண்டு வந்​துள்​ளது. இந்​திய இளைஞர்​கள் மியான்​மர் மற்​றும் கம்​போடி​யாவில் உள்ள மோசடி முகாம்​களுக்கு கடத்​தப்​பட்​டுள்​ளனர்.

அங்கு அவர்​களின் பாஸ்​போர்ட் பறி​முதல் செய்​யப்​பட்டு சைபர் குற்​றங்​களில் ஈடுபட கட்​டாயப்​படுத்​தப்​ பட்​டுள்​ளனர். இவர்​களில் பலர் உடல் ரீதி​யாக​வும் மன ரீதி​யாக​வும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்​யப்​பட்ட நிபேந்​தர் சவுத்​ரி, ஒரு மோசடி முகாம் நடத்​துபவர் சார்​பில் செயல்​பட்டு வந்துள்ளார். இவர் தாய்​லாந்து வழி​யாக இந்​தி​யர்​களை மியான்​மருக்​குக் கடத்​திச் செல்​வதற்​கான போக்​கு​வரத்து ஏற்​பாடு​களைச் செய்​வ​தில் முக்​கியப் பங்​காற்​றி​யுள்​ளார்.

இளைஞர்​கள் விமானம் மூலம் பாங்​காக் கொண்டு செல்​லப்​பட்​டு, அங்​கிருந்து மே சோட் பகு​திக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பின்னர் சட்​ட​ விரோத​மாக தாய்​லாந்​து- மி​யான்​மர் எல்​லை​யைக் கடந்து மியான்​மரில் இயங்​கும் மோசடி முகாம்​களுக்​குள் கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளனர். இரண்​டாவது குற்​ற​வாளி​யான நீலேஷ் புரோகித், மோசடி முகாம் நடத்​து​வோர் சார்​பில் இந்​தியா முழு​வதும் உள்ள துணை ஏஜெண்​டு​களின் வலைப்​ பின்​னலை நிர்வகித்து வந்​துள்​ளார்.

இவர் தாய்​லாந்​து- மி​யான்​மர் எல்​லைக்கு அரு​கில் ஒரு மோசடி முகாமின் அலு​வல​கத்​தில் இருந்து செயல்​பட்​டுள்​ளார். இரு​வரும் கிரிப்​டோ கரன்சி மூலம் கட்​ட​ணம் பெற்​றுள்​ளனர். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

தென்கிழக்கு ஆசிய சைபர் மோசடி முகாம்களுக்கு இந்திய இளைஞர்களை கடத்திய வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகள் கைது
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல்: 12 சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in