லாலு உள்ளிட்ட 9 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு

லாலு உள்ளிட்ட 9 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கடந்த 2005 முதல் 2014-ம் ஆண்டு வரை, ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, ஒடிசாவின் புரி மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சியில், ஐஆர்சிடிசி-க்கு சொந்தமான 2 ஹோட்டல்கள், பிஹார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த சுஜாதா ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை, சிபிஐ தனித்தனியாக வழக்குப் பதிந்துள்ளன.

மேலும், இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 9 பேர் மீது பணமோசடி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேலும்,7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லாலு உள்ளிட்ட 9 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு
மடப்புரம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் திருப்பம்: டிஎஸ்பி உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in