அரசு, பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் இசைக்க உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: அரசு மற்​றும் பள்ளி நிகழ்ச்​சிகளில் தேசிய கீதம் இசைக்​கப்​படு​வதற்கு முன்னதாக தேசி​யப் பாடலான வந்தே மாதரம் கட்​டா​யம் இசைக்க வேண்​டும். அப்​போது அனை​வரும் எழுந்து நின்று மரி​யாதை செலுத்த வேண்​டும் என்று மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

வங்​கமொழி கவிஞர் பக்​கிம் சந்​திர சட்​டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்​பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்​றி​னார். சுதந்​திரப் போராட்ட வீரர்​களுக்கு இப்​பாடல் மிகப்​பெரிய உத்​வேகம் அளித்​தது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வந்தே மாதரம் தேசியப் பாடலாக அறிவிக்​கப்​பட்​டது. இந்​தப் பாடல் இயற்​றப்​பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்​துள்​ளது. இதை மத்​திய அரசு கொண்​டாடி வரு​கிறது.

இந்​நிலை​யில் வந்தே மாதரம் பாடலுக்கு புதிய விதி​முறை​களை மத்​திய அரசு வகுத்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட உத்​தர​வில் கூறியிருப்​ப​தாவது: அரசு மற்​றும் பள்ளி நிகழ்ச்​சிகளில் தேசிய கீதம் (ஜன கன மன) இசைக்​கப்​படு​வதற்கு முன்னதாக தேசி​யப் பாடலான வந்தே மாதரம் கட்​டா​யம் இசைக்க வேண்​டும்.

கடந்த 1937-ல் நீக்​கப்​பட்ட 4 வரி​கள் உட்பட வந்தே மாதரத்​தின் அனைத்து 6 சரணங்​களும் பாடப்பட வேண்​டும். இது 3 நிமிடம், 10 வினாடிகள் நீள​முடைய​தாக இருக்​கும். குடியரசுத் தலை​வர், ஆளுநர் பங்​கேற்​கும் நிகழ்ச்​சிகள், பத்ம விருதுகள் உள்​ளிட்ட அரசு விருது வழங்​கும் நிகழ்ச்​சிகள், தேசி​யக் கொடி ஏற்​று ​தல் போன்ற அதி​காரப்​பூர்வ நிகழ்ச்​சிகளில் தேசி​யப் பாடல் பாடப்பட வேண்​டும்.

வந்தே மாதரம் பாடும் ​போது அனை​வரும் எழுந்து நின்று மரி​யாதை செலுத்த வேண்​டும். தேசி​யப் பாடல் பாடப்​படும் சபை கவனத்​தில் கொள்​ளப்பட வேண்​டும். வந்தே மாதரம் பாடும்​ போது அல்​லது இசைக்​கப்​படும் ​போது, பார்​வை​யாளர்​கள் எழுந்து நிற்​பது கட்​டா​யம் என்​றாலும் திரையரங்​கு​களில் செய்​திப் படம் அல்​லது ஆவணப் படத்​தின் ஒரு பகு​தி​யாக தேசி​யப் பாடல் இசைக்​கப்​படும் ​போது, பார்​வை​யாளர்​கள் எழுந்து நிற்க வேண்​டும் என்​பது கட்​டாயமில்​லை. ஏனெனில் இதனால் படத்​துக்கு இடையூறு ஏற்​படு​வதுடன் தேசி​யப் பாடலின் கண்​ணி​யத்தை அதி​கரிப்​ப​தற்​குப் பதிலாக குழப்​பத்தை உரு​வாக்​கும். இவ்​வாறு அந்த உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

புதிய விதி​களின்​படி 1937-ல் நீக்​கப்​பட்ட வந்தே மாதரம் பாடலின் வரி​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. தாய் நாட்டை லட்​சுமி, சரஸ்​வ​தி, துர்​கை​யுடன் ஒப்​பிடும் வரி​களும் இனி இசைக்​கப்​படும். தேசிய கீதத்தை பாடும் ​போது கடைபிடிக்க வேண்​டிய விதி​கள் சட்​டப்​பூர்​வ​மாக வகுக்​கப்​பட்​டுள்​ளன. அது​போல் தற்​போது வந்தே மாதரம் பாடலுக்​கும் விதி​கள் வகுக்​கப்​பட்​டுள்​ளன. தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமரி​யாதை செய்​தால் 3 ஆண்​டு​கள் சிறை தண்​டனை வி​திக்​கும் வகை​யில் வி​தி​களில்​ திருத்​தம்​ கொண்​டு வந்​துள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
44 ஆண்டுக்குப் பிறகு போட்டியில்லாமல் மும்பை மேயராகப் பொறுப்பேற்றார் பாஜகவின் ரிது தாவ்டே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in