இண்டியா கூட்டணி தலைவர்களை தலைமை நீதிபதி சந்திக்க மறுத்தது ஏன்?

வாக்கு திருட்டு புகார் விவகாரம்
இண்டியா கூட்டணி தலைவர்களை தலைமை நீதிபதி சந்திக்க மறுத்தது ஏன்?
Updated on: 
1 min read

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியலில் லட்​சக்​கணக்​கான பெயர்​கள் நீக்​கப்​பட்​டது மற்​றும் தேர்​தல் முறை​கேடு​கள் குறித்​துப் பேச, மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் தலை​மை​யில் இண்டியா கூட்டணித் தலை​வர்​கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்​திக்க விருப்​பம் தெரி​வித்​திருந்​தனர். ஆனால், உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த சந்​திப்பு கோரிக்​கையை நிராகரித்​தார்.

இதுகுறித்து சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்​சய் ராவத் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தம் மற்​றும் வாக்​குக் களவாடல் குறித்​துத் தலைமை நீதிப​தி​யிடம் முறை​யிட அனு​மதி கோரினோம். ஆனால், அரசி​யலமைப்​பைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பில் இருக்​கும் தலைமை நீதிபதி எங்களைச் சந்​திக்க விரும்​ப​வில்​லை. வாக்கு திருட்​டு, தேர்​தல் முறை​கேடு மற்​றும் லட்சக்​கணக்​கான வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டதன் மூலம் ஜனநாயகத்​திற்கே ஆபத்து ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து முறை​யிட நேரம் கேட்​டால், அரசி​யல்​வா​தி​களைச் சந்​திக்க மாட்​டேன் என உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறுகிறார். தலைமை நீதிப​தி​யின் இந்த முடிவை நாட்டு மக்​கள் நிச்​சய​மாக நினை​வில் வைத்​திருப்​பார்​கள்​.

இவ்​வாறு ராவத் கூறி​னார். காங்​கிரஸ் எம்.பி. இம்​ரான் மசூத் பேசுகை​யில், “நாங்​கள் திட்​ட​மிட்​டபடி போராட்​டத்தை முன்​னெடுப்​போம். கட்​சியின் தலைமை என்ன வழி​காட்​டு​தல் வழங்​கு​கிறதோ, அதை அனை​வரும் பின்​பற்​று​வார்​கள்” என்​றார்.

தி.​மு.க முன்​னாள் எம்பி டி.கே.எஸ். இளங்​கோவன் கூறுகை​யி்ல், “தலைமை நீதிப​திக்கு என்ன மாதிரி அழுத்​தம் இருக்​கிறது எனத் தெரிய​வில்​லை. நாங்​கள் அளிப்​பது ஜனநாயகத்​தைப் பாதுகாப்பதற்​கான மனு. தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பாஜக​வுக்கு ஆதர​வாகச் செயல்​படு​கிறார், நடுநிலை​யாக இல்லை என்​பது​தான் எங்​கள் புகார். தேர்​தல் ஆணை​யம் நடுநிலை​யோடு செயல்​பட்​டால்​தான் ஜனநாயகம் தழைக்​கும். ஞானேஷ் குமாருக்கு ஆதர​வாக யார் செயல்பட்டாலும், அவர்​களும்​ ஜன​நாயகத்​திற்​கு எதி​ராகச்​ செயல்​படு​கிறார்​கள்​ என்​று​தானே அர்​த்​தம்​?” என்​றார்​.

தலைமை நீதிபதி விளக்கம்

சந்திப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், "சந்திப்பு கோரி ஞாயிற்றுக்கிழமை எனக்குக் கடிதம் வந்தது. எதற்காக இந்தச் சந்திப்பை ஏற்க இயலாது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு அன்றிரவே அவர்களுக்குப் பதில் அனுப்பி விட்டேன்.

நாட்டின் எந்தவொரு சாதாரணக் குடிமகனாக இருந்தாலும் சரி, மக்கள் பிரதி நிதியாக இருந்தாலும் சரி – அவர்களுக்காகச் சட்டரீதியான வழிகளில் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. அனைவரும் நீதிமன்றத்தை அணுக முழு உரிமை உண்டு. அவர்களின் முறையீடுகளை விசாரித்து, சட்டத்திற்கு உட்பட்டு வழங்க வேண்டிய நீதியை நீதிமன்றம் நிச்சயமாக வழங்கும்" என்றார்.

இண்டியா கூட்டணி தலைவர்களை தலைமை நீதிபதி சந்திக்க மறுத்தது ஏன்?
மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்க கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in