

புதுடெல்லி: மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎஃப்) படையினரின் வீரதீர தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
“சிஆர்பிஎஃப் படையினரின் வீரதீர தினத்தை முன்னிட்டு, நமது படையைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீரமிக்க வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், மரியாதைக்குரிய அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிஆர்பிஎஃப் படையினரின் வீரமும் தியாகமும் ஒவ்வொரு நாளும் நமது தேசத்தைப் பாதுகாக்கின்றன.
அதே நேரம், சிஆர்பிஎப் மற்றும் சிஏபிஎஃப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வுகளோ அல்லது தங்கள் சொந்தப் படையையே வழி நடத்தும் உரிமையோ கிடைப்பதில்லை. இதற்கு ஒரே காரணம், அப்படையின் உயர்மட்டத் தலைமைப் பதவிகள் அப்படைக்கு வெளியிலிருந்து வருபவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன என்பதே ஆகும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது இந்த பாகுபாட்டை நீக்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.