வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கான கட்டாய தகுதித் தேர்வில் 12% பேர் மட்டுமே தேர்ச்சி

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கான கட்டாய தகுதித் தேர்வில் 12% பேர் மட்டுமே தேர்ச்சி
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யக் குடிமக்​கள் மற்​றும் வெளி​நாடு வாழ் இந்தியர்கள் பலர் வெளி​நாட்​டு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்கின்றனர்.

அங்கு பட்​டம் பெற்ற பிறகு, இந்​தி​யா​வில் அங்​கீகரிக்​கப்​பட்ட மருத்​து​வ​ராகப் பணிபுரிய வேண்​டும் என்​றால், ‘எஃப்​.எம்​.ஜி.இ’ எனப்​படும் வெளி​நாட்டு மருத்​து​வப் பட்​ட​தா​ரி​களுக்​கான தகு​தித் தேர்வை எழுத வேண்​டும். தேசிய மருத்​துவ அறி​வியல் தேர்​வு​கள் வாரி​யம் நடத்​தும் இத்​தேர்​வில் தேர்ச்சி பெற்​றால் மட்​டுமே இந்தியா​வில் மருத்​து​வப் பயிற்சி மேற்​கொள்​வதற்​கான உரிமம் வழங்கப்​படும்.

இந்​நிலை​யில், கடந்த ஜூன் 28-ம் தேதி நாடு முழு​வதும் இந்த ஆண்​டுக்​கான எஃப்.எம்.ஜி.இ தேர்வு நடை​பெற்​றது. இதற்​கான முடிவு​களைத் தேசிய மருத்​துவ அறி​வியல் தேர்​வு​கள் வாரி​யம் நேற்​று​முன்​தினம் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட்​டது. இத்​தேர்வை நாடு முழு​வ​தி​லுமிருந்து மொத்​தம் 37,448 மருத்​து​வப் பட்​ட​தா​ரி​கள் எழு​தி​யிருந்​தனர். ஆனால், அவர்​களில் வெறும் 4,635 பேர் மட்​டுமே (12.38%) தகுதி பெற்​றுள்​ளனர். கடந்த 3 ஆண்​டு​களில் நடந்த 6 தேர்வு​களில் இது​தான் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் என்று வாரி​யம் தெரி​வித்​துள்​ளது.

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கான கட்டாய தகுதித் தேர்வில் 12% பேர் மட்டுமே தேர்ச்சி
தமிழகத்​தில் சட்​டப்​படி​யான ஆட்சி நடை​பெறுகிறது: மு.வீரபாண்டியன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in