

கோப்புப்படம்
புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான இரு மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த மசோதாக்களை ஆராய பாஜக எம்.பி., பி.பி.சவுத்ரி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, அரசியலமைப்பு சட்ட வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில் கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை 2026 பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்க கோரும் தீர்மானம் மக்களவையில் நேற்று நிறைவேறியது.