‘ஒரே வழக்கு ஒரே தரவு’, ‘சு சஹாய்’ சாட்பாட்: நீதித் துறையில் புதிய டிஜிட்டல் திட்டங்கள்

‘ஒரே வழக்கு ஒரே தரவு’, ‘சு சஹாய்’ சாட்பாட்: நீதித் துறையில் புதிய டிஜிட்டல் திட்டங்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: நீதித்துறையில் தரவு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், நீதிமன்றச் சேவைகளை எளிமைப்படுத்தவும் இரண்டு முக்கிய டிஜிட்டல் திட்டங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

'ஒரே வழக்கு ஒரே தரவு' மற்றும் 'சு சஹாய்' என்ற செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகிய இந்த இரு திட்டங்களும் நீதித்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே வழக்கு ஒரே தரவு

இந்த திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களின் தகவல்கள் ஒரே ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம் ஒரு வழக்கின் விவரங்களை அனைத்து நிலைகளிலும் தடையின்றிப் பெற முடியும். இது நீதிமன்றங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்கி, காலதாமதத்தைக் குறைக்க உதவும்.

சு சஹாய் சாட்பாட்

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற சேவைகளை எளிதாக அணுக உதவும் வகையில் 'சு சஹாய்' என்ற ஏஐ சாட்போட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தகவலியல் மையம்  மற்றும் உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. இந்தச் செயலி மூலம் குடிமக்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை எளிய இடைமுகத்தின் மூலம் பெற முடியும்.

இந்த டிஜிட்டல் முன்னெடுப்புகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்குத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் நீதித்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் கூறினார். 

‘ஒரே வழக்கு ஒரே தரவு’, ‘சு சஹாய்’ சாட்பாட்: நீதித் துறையில் புதிய டிஜிட்டல் திட்டங்கள்
“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” - பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in