

புதுடெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற 7-வது நாள் விசாரணையின்போது, தீர்ப்பை எதிர்க்கும் தரப்பை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, "பக்தரின் நம்பிக்கை தனிப்பட்ட விவகாரம் என்பதால், பக்தருக்கும், படைத்தவருக்கும் இடையிலான விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது" என வாதிட்டார்.