மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி - இதுவரை 1.5 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்

மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி - இதுவரை 1.5 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியில் இதுவரை சுமார் 1.5 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தராகண்ட், ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மேகாலயா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், நாகலாந்து, திரிபுரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் என மொத்தம் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி நடைபெறுகிறது.

இந்த பணியின் கீழ் இதுவரை 12 மாநிலங்களுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் எஸ்ஐஆர் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ள 12 மாநிலங்களில் மொத்தம் 13,77,27,807 கோடி வாக்காளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் வசிப்பிடத்தில் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்து சென்றவர்கள், உயிரிழந்தவர்கள் என சுமார் 1,58,59,834 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மொத்தம் சதவீதம் சுமார் 11.51%.

அதிகபட்சமாக தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் பகுதியில் சுமார் 29.64 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அருணாச்சல 19.09%, ஹரியானா 16.38%, சத்தீஸ்கர் 12.8%, மிசோரம் 5.2%, மணிப்பூர் 7.5%, உத்தராகண்ட் 10.39%, சண்டிகர் 12.8%, மேகாலயா 7.67%, ஜார்கண்ட் 16.48% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் 44.89 லட்சம் வாக்காளர்கள், ஹரியானாவில் 33.83 லட்சம் வாக்காளர்கள், ஒடிசாவில் 20.12 லட்சம் வாக்காளர்கள்,சிக்கிமில் 37,724 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகளை தொடுத்துள்ளது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி - இதுவரை 1.5 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்
“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” - இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in