

மும்பை: மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, மும்பை காவல் துறையின் கூடுதல் ஆணையராக இருந்தவர் சதானந்த் வசந்த் டேட்.
இவரது தலைமையிலான போலீஸ் படையினர்தான் லஷ்கர் தீவிரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
வெடிகுண்டில் இருந்து வெளியேறிய சிறுதுகள் ஒன்று அவரது கண் அருகே அகற்ற முடியாத நிலையில் இன்னும் உள்ளது. இவரது வீரதீர செயலுக்காக குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது. சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமையில் இருந்து விடுவிக்கப்பட்ட சதானந்த் வசந்த் டேட், மகாராஷ்டிரா டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்து வரும் ராஷ்மி சுக்லா நாளை மறுநாள் ஒய்வு பெறுகிறார்.