பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ள சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்​ளிட்ட ஊட்டச்சத்து வரம்புகளை மறுநிர்ணயம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்துக்கு உத்தரவு
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ள சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்​ளிட்ட ஊட்டச்சத்து வரம்புகளை மறுநிர்ணயம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: பதப்​படுத்​தப்​பட்ட மற்​றும் பொட்​டலமிடப்​பட்ட உணவுப் பொருட்​களில் உள்ள சர்க்​கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்ட ஊட்​டச்​சத்​துகளுக்​கான அனுமதிக்​கப்​பட்ட வரம்புகளை மறுநிர்​ணயம் செய்ய, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணை​யத்​துக்கு, உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்​டுள்​ளது.

பதப்​படுத்​தப்​பட்ட மற்​றும் பொட்​டலமிடப்​பட்ட உணவுப் பொருட்களில் அதி​களவு சர்க்​கரை, உப்பு மற்​றும் கொழுப்பு இருப்ப​தால் ஏற்​படும் உடல்​நலப் பாதிப்​பு​கள் குறித்து நுகர்வோருக்​கும், குறிப்​பாக, குழந்​தைகளுக்​கும் விழிப்​புணர்வு ஏற்படுத்​தும் வகை​யில், உணவுப் பொருட்​களின் பாக்கெட்டுகளின் முன்​பக்​கத்​தில் எச்​சரிக்கை முத்​திரைகளை அறிமுகப்​படுத்​தக்​கோரி வழக்​கறிஞர் ராஜீவ் சங்​கர் திரிவேதி என்பவர் தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி ஜெ.பி.பார்​திவாலா, கே.வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு வழங்​கி​யுள்ள தீர்ப்​பில், “பொட்​டலமிடப்​பட்ட உணவுப் பொருட்​களில் இடம்​பெறும் சர்க்​கரை, உப்பு, கொழுப்பு உள்​ளிட்ட ஊட்​டச் சத்​துகளுக்​கான அனுமதிக்​கப்​பட்ட வரம்புகளை மறுநிர்​ணயம் செய்ய வேண்​டும்.

எச்சரிக்கை முத்திரை

நிர்​ணயிக்​கப்​பட்ட வரம்பை மீறும் ஊட்​டச்​சத்​துகள் குறித்து நுகர்வோர் எளி​தில் அறிந்து கொள்​ளும் வகை​யில், பாக்கெட்டுகளின் முன்​பக்​கத்​தில் அறுகோண வடி​வி​லான எச்சரிக்கை முத்​திரைகளை இடம்​பெறச் செய்ய வேண்​டும். சேர்க்கப்​பட்ட சர்க்​கரை மற்​றும் கொழுப்​புக்​குப் பதிலாக மொத்த சர்க்​கரை மற்​றும் நிறைவுற்ற கொழுப்பு ஆகிய​வற்றை உப்​புடன் சேர்த்​துக் கவலைக்​குரிய ஊட்​டச்​சத்​துகளாகக் கருத வேண்​டும். சர்க்​கரை, உப்பு, கொழுப்பு என ஒவ்​வொரு ஊட்​டச்​சத்​துக்​கும் தனித்​தனியாக எச்​சரிக்கை முத்​திரை இடம்​பெற வேண்​டும்.

அதிக சர்க்கரை..

எச்​சரிக்கை அறுகோணத்​தில் தொடர்​புடைய ஊட்​டச்​சத்​துக்​கான தரப்​படுத்​தப்​பட்ட சின்​னத்​துடன், அதற்​கேற்ற ‘அதி​கக் கொழுப்பு, அதி​கச் சர்க்​கரை அல்​லது அதிக உப்பு’ என்ற வார்த்​தைகள் இடம்​பெற வேண்​டும், ஒரே ஒருங்​கிணைந்த அறுகோணத்​துக்​குப் பதிலாக, கவலைக்​குரிய ஒவ்​வொரு ஊட்​டச்​சத்​துக்​கும் தனித்​தனி அறு கோணம் இருக்க வேண்​டும்.

ஒவ்​வொரு முத்​திரை​யும் உணவுப் பொருளின் பாக்​கெட்​டின் முன்​பக்​கக் காட்​சிப் பரப்​பில் குறைந்​த​பட்​சம் 4 முதல் 5 சதவீத இடத்தைப் பெற்​றிருக்க வேண்​டும். மேலும், நுகர்​வோர் எளி​தில் படித்​துப் புரிந்து கொள்​ளும் வகை​யில், எச்​சரிக்கை வாசகங்​கள் தெளிவான எழுத்​துகளில் இடம்​பெற வேண்​டும், இதற்​காக உணவுப் பொருட்​களின் பேக்​கேஜிங் மற்​றும் லேபி​ளிங் தொடர்பான புதிய விதி​முறைகளை 4 மாதங்​களுக்​குள் இந்​திய உணவுப் பாது​காப்பு மற்​றும் தர நிர்​ணய ஆணை​யம் இறுதி செய்ய வேண்​டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ள சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்​ளிட்ட ஊட்டச்சத்து வரம்புகளை மறுநிர்ணயம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
“முந்தைய காலத்தில் தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது” - திருப்பரங்குன்றம் கோயில் முதல் ஸ்தானிகர் தகவல்

X