“காங்கிரஸ் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு, ஆனால்...” - அசாமில் பிரதமர் மோடி பேச்சு

“காங்கிரஸ் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு, ஆனால்...” - அசாமில் பிரதமர் மோடி பேச்சு
Updated on
1 min read

குவஹாத்தி: வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்து ஆட்சி நடத்தியது கட்சி காங்கிரஸ் என்று குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, பாஜக அதனை அஷ்டலட்சுமியாகப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அசாமில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு குவஹாத்தியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்தது. ஆனால், எங்கள் அரசு வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வட கிழக்கு மாநிலங்களை நாங்கள் அஷ்டலட்சுமியாகப் பார்க்கிறோம். அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

காங்கிரஸ் இந்தியாவை ஒரு தேசமாகக் கூட கருத மறுக்கிறது. இந்திய தாய் மீது சிறிதளவு மரியாதைகூட காட்டாதர்கள் நாட்டின் நலனுக்காக ஒருபோதும் பாடுபட முடியாது. வட கிழக்கு மாநிலங்களில் நிலவிய மிக மோசமான உள்கட்டமைப்பு மக்களின் மனங்களில் இன்னமும் உள்ளது. இன்று வாகனங்கள் ஓடுவது மட்டுமல்ல, விமானங்கள் கூட தரையிறங்கக்கூடிய வகையில் நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இது பெருமைக்குரிய தருணம். அசாமில் உள்கட்டமைப்பை மேம்படுத்த எனது அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அசாம் மக்களின் மனநிலை தற்போது மாறி இருக்கிறது.

பாஜக அடைந்திருக்கும் உயரத்துக்கான முழு பெருமையும் அதன் தொண்டர்களையேச் சாரும். அமைப்பின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதனால்தான் இவ்வளவு எண்ணிக்கையிலான தொண்டர்களை நாங்கள் கொண்டுள்ளோம். நாங்கள் அனைவரும் ஒரு மந்திரத்தால் ஒன்றுபட்டுள்ளோம். பாரத் மாதா கி ஜெய் என்பதே அந்த மந்திரம்.

எனது வாழ்க்கையின் மிகப் பெரிய மரியாதை எதுவென்றால், நான் பாஜக தொண்டராக இருப்பதுதான் என்று பெருமையுடன் கூறுகிறேன். ஒரு பாஜக தொண்டராக, அசாமில் உள்ள நமது தொண்டர்கள் மற்றும் அமைப்பின் வலிமைக்கு நான் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். ஆதி சக்தி மற்றும் அன்னை காமாக்யா ஆகியோருக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த தினம் இன்று. இந்த தாக்குதலில் உயிரிழந்த இந்திய தாயின் துணிச்சலான புதல்வர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகளை இந்தியா தண்டித்த விதத்தை முழு உலகமும் பார்த்தது. சிலர் இன்றும் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.

“காங்கிரஸ் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு, ஆனால்...” - அசாமில் பிரதமர் மோடி பேச்சு
கோவை குண்டுவெடிப்பு தினம் - பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in