நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயர்: உ.பி. அமைச்சரவை ஒப்புதல்

நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயர்: உ.பி. அமைச்சரவை ஒப்புதல்
Updated on: 
1 min read

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், ஜேவாரில் அமைந்​துள்ள நொய்டா சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி​யின் பெயர் சூட்​டப்​படும் என்று அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் நேற்று அறி​வித்​துள்​ளார்.

இதன்​படி, இந்த விமான நிலை​யம் ‘நரேந்​திர மோடி சர்​வ​தேச விமான நிலை​யம், நொய்​டா’ என அழைக்​கப்​படும் என்​றும் அவர் தெரித்​துள்​ளார். பிரதமர் மோடி அரசு தலை​மைப் பொறுப்​பில் தொடர்ந்து 25 ஆண்டு​களை நிறைவு செய்​துள்​ளதைக் கவுரவிக்​கும் வகை​யில் தீர்​மானத்​தை​யும் மாநில அமைச்​சரவை நிறைவேற்​றி​யுள்​ளது.

மோடி 2001ம் ஆண்டு அக்​டோபர் 7ம் தேதி குஜ​ராத் முதல்​வ​ராகப் பதவி​யேற்​றார். அதன் பிறகு 2014 முதல் நாட்​டின் பிரதம​ராகப் பதவி வகித்து வரு​கிறார். இதன்​படி, அவர் அரசுத் தலை​மைப் பொறுப்​பில் தொடர்ந்து 25 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளார். நொய்டா சர்​வ​தேச விமான நிலை​யத்தை உரு​வாக்கி இயக்​கும் 40 ஆண்டு ஒப்​பந்​தம், சுவிட்​சர்​லாந்​தின் ஜூரிக் ஏர்​போர்ட் இன்​டர்​நேஷனல் நிறு​வனத்​தின் இந்​தி​யத் துணை நிறு​வனத்​துக்கு 2020ம் ஆண்டு வழங்​கப்​பட்​டது. பிரதமர் மோடி 2021 நவம்​பர் 25ம் தேதி இதற்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்ட இது, டெல்லி தேசி​யத் தலைநகர்ப் பகு​தி​யின் இரண்​டாவது மற்​றும் உத்​தரப் பிரதேசத்தின் ஐந்​தாவது சர்​வ​தேச விமான நிலை​ய​மாகும். கடந்த வெள்​ளிக்​கிழமை கூடிய உத்​தரப் பிரதேச அமைச்​சர​வை, பிரதமர் மோடி​யின் தொடர்ச்​சி​யான 25 ஆண்டு பொதுச் சேவையைப் போற்​றும் தீர்​மானத்தை நிறைவேற்​றியது. அக்டோபர் 7ம் தேதி நாட்​டின் வரலாற்​றில் பெரு​மைமிகு அத்தியாயம் என்று அமைச்​சரவை தீர்​மானித்​துள்​ள​தாக​வும், 25 ஆண்​டு​கள் தொடர்ந்து அர்ப்​பணிப்​புடன் பணி​யாற்​றிய பிரதமருக்கு வாழ்த்​துகளைத் தெரி​விப்​ப​தாக​வும் ஆதித்​ய​நாத் கூறி​னார்.

உத்​தரப் பிரதேசத்​தைச் சேர்ந்த மக்​களவை உறுப்​பின​ராக இருந்த​படி மோடி நாட்டை வழிநடத்​து​வது மாநிலத்​துக்​குப் பெருமை என்று ஆதித்​ய​நாத் கூறி​னார். 2017-க்கு முன்பு மாநிலத்தில் நிர்​வாகத் திறனின்​மை, பாது​காப்​பின்​மை, அடிப்படை வசதி​களின் பற்​றாக்​குறை இருந்​த​தாக​வும், பிரதமரின் அனுபவத்​தால் புதிய ஆட்​சிக் கலா​சா​ரம் வந்​த​தாக​வும் அவர் தெரிவித்​தார். வெளிப்​படை​யான நிர்​வாகம், சிறந்த சட்​டம் ஒழுங்கு, நவீன உள்​கட்​டமைப்பு ஆகியவை இப்​போது மாநிலத்தின் அடை​யாளங்​கள் என்​றும் கூறி​னார்.

நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயர்: உ.பி. அமைச்சரவை ஒப்புதல்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in