“நக்சலிசத்தால் பயனில்லை; அமைதியே வளர்ச்சிக்கு வழி” - மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து

“நக்சலிசத்தால் பயனில்லை; அமைதியே வளர்ச்சிக்கு வழி” - மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடை​பெற்ற பஸ்​தர் ஒலிம்​பிக் 2025 விளை​யாட்​டுப் போட்​டி​யின் நிறைவு விழா​வில் பங்கேற்ற மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறிய​தாவது:

2026 மார்ச் 31-க்​குள் நக்​சலிசத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அரசு உறு​தி பூண்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக, சத்​தீஸ்​கரில் ஏழு மாவட்​டங்​களைக் கொண்ட பஸ்​தர் கோட்​டத்தை அடுத்த 5 ஆண்​டு​களில் நாட்​டின் மிக​வும் வளர்ந்த பழங்​குடி​யின பகு​தி​யாக மாற்​று​வதற்கு மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது.

நக்​சலிசம் என்​பது அப்​பகு​தி​யின் வளர்ச்​சியை தடுத்து நிறுத்​தும் ஒரு விஷப்​பாம்பு போன்​றது. இந்த அச்​சுறுத்​தல் முடிவுக்கு வந்​தவுடன் வளர்ச்​சி​யின் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கும். நக்​சலிசத்​தால் ஆயுதம் ஏந்​துபவர்​களுக்கோ, பாது​காப்பு படை​யினருக்​கோ எந்த பயனும் இல்​லை. அமை​தி​யால் மட்​டுமே வளர்ச்​சிக்கு வழி​வகுக்க முடி​யும்.

2026-ல் பஸ்​தர் ஒலிம்​பிக்​கிற்​காக நான் அடுத்​த​முறை இங்கு வரும்​போது, சத்​தீஸ்​கர் மட்​டுமின்றி நாடு முழு​வ​தி​லும் இருந்​தும் நக்​சலிசம் முற்​றி​லு​மாக ஒழிக்​கப்​பட்​டிருக்​கும்.

எனவே, நக்சல் அமைப்புடன் தொடர்​புடைய​வர்​கள் ஆயுதங்​களைக் கைவிட்​டு, சமூகத்​தின் பிர​தான நீரோட்​டத்​தில் இணை​ய வேண்டும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

“நக்சலிசத்தால் பயனில்லை; அமைதியே வளர்ச்சிக்கு வழி” - மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து
பாகிஸ்தானுடன் தொடர்பு: முன்னாள் விமானப்படை வீரர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in