கோடையில் மின் தடை கூடாது: அதிகாரிகளுக்கு ஆந்திர அமைச்சர் உத்தரவு

கோடையில் மின் தடை கூடாது: அதிகாரிகளுக்கு ஆந்திர அமைச்சர் உத்தரவு
Updated on
1 min read

அமராவதி: ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மின்வாரிய துறை அதிகாரிகள், விபத்து தடுப்பு துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்​போது அமைச்​சர் அனிதா ‘ஹீட் வேவ் ஆக்​‌ஷன் பிளான் -2026’ திட்​டத்தை அறி​முகப்​படுத்தி பேசி​ய​தாவது: மத்​திய ஆந்​தி​ரா, ராயல சீமா மாவட்​டங்​களில் இந்த ஆண்டு வழக்​கத்தை விட அதிக வெப்​பம் இருக்​கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இதனை கருத்​தில் கொண்டே 2026 திட்​டம் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பள்​ளி, கல்​லூரி​களுக்கு விடு​முறை, குழந்​தைகள், முதியோர்​கள் பாதிக்​கப்​ப​டாத​வாறு அவர்​களுக்கு ஆலோ​சனை வழங்​கு​வது போன்​றவற்றை கடைப்​பிடிக்க வேண்​டும்.

தண்​ணீர், மோர்ப் ​பந்​தல்​கள் அமைப்​பது, தண்​ணீர் தட்​டுப்​பாடு, மின் தடை வராமல் கவன​மாக இருக்க வேண்​டும். மாநிலம் முழுவதும் மின் தடை என்ற பேச்​சுக்கே இடம் இருக்க கூடாது. இவ்வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

கோடையில் மின் தடை கூடாது: அதிகாரிகளுக்கு ஆந்திர அமைச்சர் உத்தரவு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கயில்லா தீர்மானம் மீது கார​சார விவாதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in