“எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை” - சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாக பேட்டி

“எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை” - சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாக பேட்டி
Updated on
1 min read

பெங்களூரு: எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் நேற்று தெரிவித்தனர்.

கர்​நாட​கா​வில் சித்​த​ராமையா முதல்​வராக பதவி​யேற்று இரண்​டரை ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்​கொடி உயர்த்தினர்.

இதனால், காங்​கிரஸ் மேலிடத்​துக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது. காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே, கட்​சி​யின் மூத்த தலை​வர்​களான சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், மேலிட பொறுப்​பாளர் ரன்​தீப் சிங் சுர்​ஜே​வாலா ஆகியோரிடம் ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதையடுத்து கே.சி.வேணு கோ​பால் கேட்டுக்கொண்டபடி, டி.கே.சிவகு​மாரை சித்​த​ராமை​யா தொடர்​பு கொண்டு பெங்​களூரு​வில் உள்ள தனது காவிரி இல்​லத்​துக்கு சிற்​றுண்டி சாப்​பிட வரு​மாறு அழைப்பு விடுத்​தார். இதையேற்று நேற்று அங்கு சென்ற டி.கே.சிவகு​மாரை வரவேற்ற சித்​த​ராமை​யா, அவருடன் காலை உணவை சாப்​பிட்​டார். பின்​னர் இரு​வரும் தனி​யாக 15 நிமிடங்​கள் ஆலோ​சனை நட‌த்​தினர்.

பின்​னர் இருவரும் கூட்​டாக செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர். அப்​போது சித்​த​ராமையா கூறும்போது, ‘‘காங்​கிரஸ் மேலிடம் கேட்​டுக்​கொண்​ட​படி நானும் துணை முதல்​வர் டிகே சிவகு​மாரும் ஒன்​றாக காலை சிற்​றுண்டி சாப்​பிட்​டோம். எங்​களு​டைய சந்​திப்பு சிறப்​பாக அமைந்​தது. எனக்​கும், டி.கே. சிவகு​மாருக்​கும் இடையே எந்த கருத்து வேறு​பாடும் இல்​லை. எதிர்​காலத்​தி​லும் எந்த முரண்​பாடும் இருக்​காது. இரு​வரும் சேர்ந்து செயல்​படு​வோம். கட்சி மேலிடம் எடுக்​கும் முடிவுக்கு இரு​வரும் கட்​டுப்​படு​வோம். பெங்​களூரு மாநக​ராட்சி தேர்​தல், உள்​ளாட்சி தேர்​தல் ஆகிய​வற்​றில் எவ்​வாறு வெல்​வது என்​பது குறித்து பேசினோம்’’ என்றார்.

சுமுக உறவு நீடிக்​கும்: டி.கே. சிவகு​மார் கூறும்​போது, ‘‘சித்​த​ராமையா எனக்கு காலை​யில் சிற்​றுண்டி அளித்து உபசரித்​தார். நான் அவரை எனது வீட்​டுக்கு அழைத்து விருந்து அளிக்க இருக்​கிறேன். கர்​நாடக மக்​கள் எங்​களின் மீது நம்​பிக்கை வைத்து பெரும்​பான்​மை​யுடன்​கூடிய வெற்​றியை அளித்​துள்​ளனர். எனவே மக்​களுக்கு நல்​லாட்​சியை வழங்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறோம்'' என்​றார்.

சித்தராமையாவே மீதம் உள்ள இரண்டரை ஆண்டுக்கும் முதல்வர் பதவியில் தொடர்வாரா அல்லது மாற்றப்படுவாரா என்பது குறித்து இருவரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

“எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை” - சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாக பேட்டி
இருமல் மருந்து கடத்தல் விவகாரம்: மேலும் 12 நிறுவனங்கள் மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in