

பிரதிநிதித்துப் படம்
வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் கோடெய்ன் மூலப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இருமல் மருந்து கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (எப்எஸ்டிஏ), 26 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது கடந்த 15-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. அப்போது மேலும் 12 நிறுவனங்கள் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அந்த 12 நிறுவனங்களில் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றனர். ஆனால் அந்த நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன அல்லது அந்த முகவரியில் வேறு நிறுவனங்கள் செயல்பட்டன. இதையடுத்து அந்த 12 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் பதில் வராத காரணத்தால், அந்த நிறுவனங்கள் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.