வரலாற்றை மதிக்காவிட்டால் சிறந்த எதிர்காலம் இல்லை: வந்தே மாதரம் சர்ச்சை பற்றி சத்குரு கருத்து

வரலாற்றை மதிக்காவிட்டால் சிறந்த எதிர்காலம் இல்லை: வந்தே மாதரம் சர்ச்சை பற்றி சத்குரு கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: தனது வரலாற்றை மதிக்​காத எந்​தவொரு நாடும் தனக்​கென ஒரு எதிர்​காலத்தை உரு​வாக்க முடி​யாது என்று ஈஷா அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் சத்​குரு கூறி​னார்.

வந்தே மாதரம் தேசி​யப் பாடலின் 150-வது ஆண்டு விழாவை முன்​னிட்டு நாடாளு​மன்​றத்​தில் சிறப்பு விவாதம் நடத்​தப்​பட்​டது. இந்த விவாதம் பற்றி காங்​கிரஸ் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பியது.

இதுகுறித்து ஈஷா அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் சத்​குரு கூறிய​தாவது: நமக்கு புத்​தி​சாலித்​தனம் இருக்​கலாம், திறமை இருக்​கலாம், வளங்​கள் இருக்​கலாம், நாகரிக வரலாறு ஏராள​மாக இருக்​கலாம், ஆனால் நாம் ஊக்​குவிக்​கப்​பட​வில்லை என்​றால் இந்த தலை​முறை​யில் நாம் அதிக தூரம் செல்ல மாட்​டோம். இது அடுத்த தலை​முறையை கடுமை​யாக முடக்​கி​விடும்.

நாம் நம்மை வளரும் நாடு என்று அழைக்​கிறோம். 2047-க்​குள் நாம் வளர்ச்சி அடைந்​த நாடாக மாற வேண்​டும் என்ற திட்​டம் நம்​மிடம் தற்​போது உள்​ளது. ஒரு திட்​டம் என்​றால் அதற்கு உத்​வேகம் தேவை. எந்த உத்​வேக​மும் இல்​லை​யென்​றால், திட்​டத்தை யார் நிறைவேற்​று​வார்​கள்?

வளர்ந்த இந்​தியா திட்​டத்​தில் சில குறை​பாடு​கள் இருக்​கலாம். என்​றாலும் முழு தேச​மும் அந்த திட்​டத்தை ஆதரித்து அதற்கு வடிவம் கொடுத்​திட பாடு​படு​வது அவசி​யம். இவ்​வாறு சத்​குரு கூறி​னார்​

வரலாற்றை மதிக்காவிட்டால் சிறந்த எதிர்காலம் இல்லை: வந்தே மாதரம் சர்ச்சை பற்றி சத்குரு கருத்து
திருப்​பதியில் முக்கிய நாட்களில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in