

புதுடெல்லி: பிஹார் மாநில அமைச்சராக உள்ள நிதின் நபின் (45), பாஜகவின் தேசிய செயல் தலைவராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இந்த தகவலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தெரிவித்திருந்தார். இவர் ஜே.பி.நட்டாவுக்கு அடுத்தபடியாக தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நிதின் நபின் பாட்னாவிலிருந்து நேற்று மதியம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு அவரை டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக் கொண்டார்.