

கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி
திருவனந்தபுரம்: கேரள மாநில அமைச்சர் வி.சிவன்குட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்களுக்கு எதிரான பல அம்சங்கள் உள்ளன. இந்த சட்டங்களைக் கண்டித்து வரும் 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொழிலாளர் மாநாட்டை கேரள அரசு நடத்தவுள்ளது. மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கவுள்ளார்.
மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் நலனுக்கு விரோதமாகவும் இந்த சட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் இந்த சட்டங்கள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும், மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதாகவும் அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.