ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கக்கோரி தீர்மானம்: பாஜக எம்பி முன்மொழிவு

ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கக்கோரி தீர்மானம்: பாஜக எம்பி முன்மொழிவு
Updated on
1 min read

புதுடெல்லி: ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர் மீண்டும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் துபே, ‘‘இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஜார்ஜ் சோரஸ் போன்ற சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ராகுல் காந்தி எவ்வாறு நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது குறித்து மக்களவையில் இன்று (பிப். 12) தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளேன். அந்த தீர்மானத்தில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று நாடாளுமன்ற மக்களவையில் உரை​யாற்​றிய ராகுல் காந்தி, ‘‘நாம் தீவிரமடைந்து வரும் புவி​சார் அரசி​யல் மோதல்​கள் நிறைந்த உலகில் வாழ்ந்து வரு​கிறோம். அமெரிக்​கா​வின் ஆதிக்​கத்​துக்கு சீனா, ரஷ்யா மற்றும் பிற சக்​தி​கள் சவால் விடு​கின்​றன. போர் சகாப்​தம் முடிந்து​விட்​ட​தாக பிரதமர் மோடி​யும், பாது​காப்பு ஆலோ​சகரும் சில நாள்​களுக்கு முன் தெரி​வித்​தனர். ஆனால், நாம் போர் சகாப்தத்​துக்கு மத்​தி​யில்​தான் வாழ்ந்து கொண்​டிருக்​கிறோம். உக்​ரைன், காசா, மத்​திய கிழக்​கு​ நாடுகளில் போர்​கள் நடைபெற்று வரு​கின்​றன. ஈரானில் போர் அச்​சுறுத்​தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்​தூரை சந்​தித்​தோம்.

டாலருக்கும், அமெரிக்க மேலா​திக்​கத்​துக்​கும் சவால் விடப்படுகிறது. அமெரிக்கா​வுக்​கும், சீனா​வுக்கும் இடையி​லான போட்​டி​யில், மிக​வும் மதிப்​புமிக்க ஒரு சொத்து இந்​திய தரவு​கள் என்​பதை தெளிவுபடுத்த விரும்​பு​கிறேன். அமெரிக்கா வல்​லர​சாக தொடர விரும்​பி​னால், டாலரைப் பாது​காக்க விரும்​பி​னால், அதற்கான வழி இந்​தி​யர்​கள் ​தான். மக்​கள் ​தொகை கூடு​வது சுமை என்​றும், பேரழிவு என்​றும் பலர் சொல்​கின்​றனர். ஆனால், மக்​கள் ​தொகை தான் நம்​மிடம் இருக்கக் கூடிய மிகப்​பெரிய சொத்​து. அது நமது பலம். அமெரிக்கா​வுடன் ஒப்பந்​தம் செய்து நீங்​கள் ​(மத்​திய அரசு) இந்தியாவை விற்றுவிட்டீர்​கள்.

இந்​தி​யாவை விற்​ற​தில் உங்களுக்கு வெட்​கமாக இல்​லை​யா? நீங்கள் எங்​கள் தாய் பாரத மாதாவை விற்று விட்​டீர்​கள். இதில் சுவாரஸ்​ய​மான விஷ​யம் என்னவென்​றால், பிரதமர் பலனில்லாமல் இந்​தி​யாவை விற்க மாட்​டார் என்​பது எனக்​குத் தெரி​யும். அவர் ஏன் இந்​தி​யாவை விற்றார் என்​பது உங்​களுக்​குத் தெரி​யு​மா? ஏனென்​றால் அவர்​கள் அவரது கழுத்​தைப் பிடித்திருக்கின்​றனர்.

ஒன்று தொழில​திபர் அதானி மீதான அமெரிக்க வழக்​கு. மற்றொன்று இன்​னும் ரகசி​ய​மாக வைக்​கப்​பட்​டுள்ள ‘எப்​ஸ்​டீன் கோப்​பு​கள்’ தொடர்​பானது. எப்​ஸ்​டீன் தொடர்​பான 30 லட்​சம் கோப்​பு​கள் வெளி​யாகி உள்ளன” என தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in