85 நிமிடங்களில் முடிந்த குறுகிய மத்திய பட்ஜெட் உரை!

85 நிமிடங்களில் முடிந்த குறுகிய மத்திய பட்ஜெட் உரை!
Updated on
1 min read

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நேற்று ஒப்​பீட்​டள​வில் ஒரு குறுகிய உரை​யில் 2026-27 நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார்.

அவரது பட்​ஜெட் உரை சுமார் 85 நிமிடங்​கள் அல்​லது 1 மணி நேரம் 25 நிமிடங்​கள் நீடித்​தது. இது பாஜக தலை​மையி​லான என்டிஏ அரசின் மூன்​றாவது பதவிக் காலத்​தில் தாக்​கல் செய்யப்படும் மூன்​றாவது பட்​ஜெட் மற்​றும் நிர்​மலா​வின் தொடர்ச்​சி​யான 9-வது பட்​ஜெட் ஆகும். இந்​திய நாடாளு​மன்ற வரலாற்​றில் மிக நீண்ட பட்​ஜெட் உரையை நிகழ்த்​தி​ய​வர் என்ற சாதனையை அவர் ஏற்​கெனவே படைத்​துள்​ளார்.

2020 மத்​திய பட்​ஜெட் தாக்​கலின்​போது, அவரது உரை 2 மணி நேரம் 42 நிமிடங்​கள் நீடித்​தது. 2019-ல் நிர்​மலா​வின் முதல் பட்​ஜெட் உரை 2 மணி நேரம் 17 நிமிடங்​கள் நீடித்​தது. அதுவே அவரது இரண்​டாவது மிக நீண்ட பட்​ஜெட் உரை​யாகும். எனவே 2026 பட்​ஜெட் உரை ஒப்​பீட்​டள​வில் குறுகிய​தாக இருந்​தது.

வார்த்​தைகள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் இந்​திய வரலாற்​றில் மிக நீண்ட பட்​ஜெட் உரையை, 1991-ல் அப்​போதைய நிதியமைச்சர் மன்​மோகன் சிங் வழங்​கி​னார். அந்த உரை 18,700 வார்த்​தைகளை கொண்​டிருந்​தது.

85 நிமிடங்களில் முடிந்த குறுகிய மத்திய பட்ஜெட் உரை!
ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்த முதல்வர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in