

புதுடெல்லி: சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, “நக்சலைட்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். ‘திமாகி நக்சல்கள்’ (மனதளவில் நக்சல்கள்) பல அரசியல் கட்சிகளிலும் பல்வேறு அமைப்புகளிலும் ஊடுருவியுள்ளனர். அவர்களை தோற்கடித்து, தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
மோடியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “ராகுல் காந்தி, ஆயுதமேந்திய நக்சல்களை ஒழித்ததற்காக மோடிக்கு நன்றி சொல்லுங்கள். முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்சலிசத்தை இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று விவரித்ததை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அடுத்த இலக்கு திமாகி நக்சல்களை ஒழிப்பதுதான்'' என தெரிவித்துள்ளார்.